பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த கல்வியாண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடவும், இலவச லேப்டாப், கணித உபகரணப் பெட்டி, கலர் பென்சில்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவும் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகிய இயக்குநர் பணியிடங்களும், தேர்வுத்துறை இணை இயக்குநர் (மேல்நிலை) உள்பட 3 இணை இயக்குநர் பணியிடங்களும் 4 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த இடங்களில் இப்போது அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வித் திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என 2 சி.இ.ஓ. பணியிடங்களும் காலியாக உள்ளன. அதோடு திருநெல்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
திருவாரூர், கரூர், செய்யாறு, மத்திய சென்னை உள்ளிட்ட 44 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக இந்த காலியிடங்களை நிரப்பினால் தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்தப்படுவதோடு, கல்விப் பணிகளும் சிறப்பாக மேற்பார்வை செய்யப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment