கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மொத்தம் 257 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1200 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், திருப்பூர் வடக்கு 27, திருப்பூர் தெற்கு 12, அவிநாசி 18, ஊத்துக்குளி 10, உடுமலை 9, வெள்ளக்கோவில் 6, தாராபுரம் 5, காங்கேயம் 4, பொங்கலூர் 3 என மொத்தம் 94 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் 35 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 17 பள்ளிகளில் துவங்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை வருவாய் மாவட்டத்தில் 128 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை நேற்று முன்தினம்(10ம் தேதி) துவங்கியது. ஆங்கில வழிக்கல்வி முறையின் கீழ் செயல்படும், உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment