டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது: தட்டச்சர், எழுத்தர், வரிதண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான TNPSC குரூப்-4 தேர்வு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுலை 15. மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது.
மாநிலமெங்கும் தேர்வு நடைபெறும் மொத்த மையங்கள் 258. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர், தேர்வாணைய இணையதளம் சென்று, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment