கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, June 5, 2013

    பள்ளி வாகனங்களில், அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வது குறித்து, புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்து துறை

    ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறை மண்டலங்களில், பள்ளி வாகனங்களை சோதனை செய்யும் பணி நடந்தது. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும், ஆட்டோக்களில், 12 வயதுக்கும் குறைவான வயது உடைய, மாணவ, மாணவியர் இருப்பின், ஐந்து பேரை மட்டுமே, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.


    12 வயதுக்கு மேல் இருப்பின், மூன்று பேருக்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில், அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக தடுத்து, விபத்துக்களை தவிர்க்கும் வகையில், அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து, பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆட்டோ, மேக்சி கேப் உள்ளிட்ட வாகனங்களில் விதிகளை மீறி, அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்ல கூடாது. மீறி செல்லும் வாகனங்கள் குறித்து, 044-26744445, 044-26746611 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments:

    Post a Comment