திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 231 நர்சரி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாவட்ட துவக்க கல்வி அலுவலகத்தில் தரச்சான்றுக்கான அங்கீகாரம் பெற வேண்டும்.
இந்தாண்டுக்கு, பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க வேண்டும் என, மாவட்ட துவக்க கல்வி அலுவலகம் மூலம், கடந்த மார்ச் மாதம் முதல் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற, கடைசி தேதியாக, மே 31ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அங்கீகாரத்தை புதுப்பிக்காத, 20 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment