தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் யோகா, வாழ்வியல் திறன் ஆகியவற்றை பள்ளி பாடவேளையாக மாற்றினால் முழுமையாக அமல்படுத்த முடியும். பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் புதியதாக வாழ்வியல் திறன்,யோகா போன்ற வகுப்புகள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரே நேரத்தில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்றுவிக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு பள்ளியில் இரு உடற்கல்வி ஆசிரியர்களால் அனைவரையும் கண்காணிக்க முடியாத சூழல் ஏற்படும். என்பதால் நாளடைவில் இது பின்பற்றப்படாமல் போக வாய்ப்புள்ளது. யோகா வாழ்வியல் திறன் ஆகிய இரண்டிற்கும் புதிய பாடவேளைகளாக ஒதுக்கீடு செய்தால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளுக்கு எட்டு பாடவேளை உள்ளது. ஒரு வாரத்திற்கு 40 பாட வேளைகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தலா ஏழு பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். சமூக அறிவியலுக்கு 5 பாடவேளைகள், உடற்கல்விக்கு இரு பாட வேளைகள் போக மீதமுள்ள ஐந்து பாடவேளைகள் யோக, வாழ்வியல் திறன் கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் இது முழுமையாக பள்ளிகளில் செயல்படும். மதிய உணவு இடைவேளை நேரம் 50 நிமிடங்களாக இருந்தது,30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் சிரமம் ஏற்படும். உணவு இடைவேளை நேரத்தை குறைக்க கூடாது.
தமிழாசிரியர்கள் கழக மாநில துணைத்தலைவர் இளங்கோவன் கூறுகையில்,""பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வந்தது வரவேற்க தக்கது. யோகா வாழ்வியல் திறன் கல்விக்கு தனியாக பாடவேளை ஒதுக்கீடு செய்தால் நடைமுறைக்கு சாத்தியப்படும். இல்லை என்றால் பள்ளிகளில் இதனை பின்பற்றுவது நாளடைவில் குறைந்து விடும்,'' என்றார்.
No comments:
Post a Comment