ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், மொத்தம் 94 பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழி இணைப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 85 பள்ளிகளில், இதுவரை 1,597 மாணவர்கள் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து சேர்க்கை நடந்து வருவதால், மீதமுள்ள ஒன்பது பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதனால், மாணவர் சேர்க்கை மேலும்
உயரும், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment