மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான, நல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, மத்தியப் பணியாளர் நலத் துறை வசம் உள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட புகார்கள், பென்ஷன் தாரர்களின் கோரிக்கைள் ஆகியவற்றை இந்த துறை தான் கவனித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 60 ஆக உள்ளது. இதை, 62 ஆக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தும்படி, பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாயின.இது குறித்து, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை. இது பற்றி, எவ்வித குறிப்பும், பிரதமருக்கு அனுப்பப்படவில்லை;
அப்படியொரு திட்டம் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை' என்றார்.மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது என்றால், பல்வேறு துறைகளிடும் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும், நிதி அமைச்சகத்தின் ஆலோசனை இல்லாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க, பல்வேறு பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுத்துவரும் நிலையில், இது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment