பள்ளி மாணவர்களுக்கு,தினமும் அரசு போக்குவரத்து கழகம் மூலம், எவ்வளவு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது,' என்ற, அறிக்கையை அனுப்ப, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.பாடபுத்தகங்களை போன்று, பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்களும், விரைவில் கிடைக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழக கிளைகளில்,இலவச பஸ் பாஸ் விண்ணப்பத்தை பெற்று, போட்டோவுடன் திரும்ப ஒப்படைத்த பின், பள்ளிகள் மூலம், பஸ் பாஸ் வினியோகம் செய்யப்படும். தற்போது இப்பணி மந்த நிலையில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கண்காணிப்பு: இதை தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள், தினமும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் விபரங்கள், நிலுவையில் உள்ள பஸ் பாஸ்கள் போன்ற விபரங்களை,சேகரித்து பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment