கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, June 26, 2013

    VAO VI Phase Results publised

    click here get your result

    பள்ளி வேலை நேரத்தில் மாற்றமில்லை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக்கு பின்பே பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்


    பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 



    Monday, June 24, 2013

    குரூப்- 4 தேர்வு பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி தமிழக அரசு உத்தரவு

     குரூப் - 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு துறைகளில் காலியாக உள்ள 5,666 உதவியாளர், சுருக்கெழுத்தர் காலிபணியிடங்களுக்கு, ஆகஸ்ட்டில் தேர்வு நடத்த உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 


    உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் புது நடைமுறை

    உதவி பேராசிரியர் நியமனத்தில் பணி அனுபவம் கணக்கிடுவதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய நடைமுறையால் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 



    இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (24.06.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் ஒரு தரப்பு தனி நீதிபதி தீர்ப்பிற்கு விதித்த இடைகால தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது, ஆனால் இருதரப்பும் இந்த வழக்கை விரைவில் முடித்து கொள்ள வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.ஆகையால் வழக்கிற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க அவசியமில்லை என்றும், இவ்வழக்கு அடுத்த மாதம் ஜூலை 16 தேதி முதல் தொடர்ந்து விசாரித்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல்

    "ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.

    NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்.



    ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம்

    மதுரையில், தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராம மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில், ஆங்கில வழிக் கல்வியை அரசு செயல்படுத்தியது.


    Sunday, June 23, 2013

    தமிழக அரசு எச்சரிக்கை மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர் கல்விச்சான்றுகள் ரத்து

    பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு: பள்ளி ஆசிரியர்கள் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும். புதுமையில் நாட்டம் உள்ளவர்களாகவும், திறமைகளை வளர்த்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். 


    கல்வி அதிகாரிகள் கெடுபிடி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி

    முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சேர்க்கும் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்க முடியாமல் திணறுகின்றனர். 


    பள்ளிகளில் யோகா, வாழ்வியல் திறன் தனி பாடவேளையாக மாற்ற வேண்டும்

    தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் யோகா, வாழ்வியல் திறன் ஆகியவற்றை பள்ளி பாடவேளையாக மாற்றினால் முழுமையாக அமல்படுத்த முடியும். பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் புதியதாக வாழ்வியல் திறன்,யோகா போன்ற வகுப்புகள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம்...: பள்ளி இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என திடீர் முடிவு

    பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


    Saturday, June 22, 2013

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

    இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

    பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா பயின்றவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதில் சிக்கல்

    அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர். பழநியிலுள்ள பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில், பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பயின்று, பி.எட்., பட்டம் பெற்ற மாணவர்கள், 2012 அக்டோபரில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின் போது,


    2013-14 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)

    Friday, June 21, 2013

    பள்ளிகளை வகைபடுத்திடும் பட்டியல் ~ மாநிலத் திட்ட இயக்குனர் வெளியீடு.


    2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டி (புதியது)

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

     
    முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநு£ல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.


    பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு


    பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.

    காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
    9.20 - 10.00 முதல் பாடவேளை
    10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
    10.40 - 10.50 இடைவேளை
    10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
    11.30 - 12.10 நான்காம் பாடவேளை
    12.10 - 12.25 யோகா
    12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
    12.40 - 1.10 உணவு இடைவேளை
    1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
    1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
    2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
    2.45 -2.55 இடைவேளை
    2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
    3.35 - 4.15 எட்டாம் பாடவேளை

    அரசு பள்ளிகளில் தினமும் மதியம் 12.10.மணி முதல் 12.25 வரை மொத்தம் 15 நிமிடம் யோகா வகுப்பு நடத்த கல்வித்துறை உத்தரவு

    Thursday, June 20, 2013

    ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை

    பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை நடத்தினார். 


    ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.

    ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் .அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு

    தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசி ரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.எனவே இவ் அரசாணையை உட்பட அனைத்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .

    அரசாணை எண் 264ன் DOWNLOAD செய்ய CLICK HERE

    மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

    மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாம் தேவை என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிநிர்வாகம் ‌தொடர்ந்த வழக்கில், மழலையர் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மழலையர் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தர தேவையில்லை என வாதிட்டார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட், பிறப்பித்த உத்தரவில், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டப்படிதான் மழலையர் பள்ளிகள் இயங்க வேண்டும் எனவும், எனவே அரசின் அங்கீகாரம் கட்டாயம் தேவை என்றும் , சம்பந்த பள்ளி அரசின் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு

    தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு, இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெற உள்ளன.

    இந்தத் தேர்வுகளில் பங்கேற்க மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

    தனித்தேர்வர்கள் அந்தந்த ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலேயே ஜூன் 20 முதல் 22 வரை ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    CLICK HERE DOWNLOAD TO தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    Wednesday, June 19, 2013

    பாடப் புத்தகத்தில் பாதுகாப்பு அறிவுரைகள்: பெற்றோர், கல்வியாளர்கள் வரவேற்பு

    ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், இடம்பெற்றுள்ள, "பல்லூடகப் பாதுகாப்பு' அறிவுரைகளை, பெற்றோர் வரவேற்றுள்ளனர்.மொபைல் போன், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு வசதிகளை, பயன்படுத்தும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.


    Sunday, June 16, 2013

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் சேர்க்கை விவரம்:

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் சேர்க்கைவிவரம்:

    1.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
    வீரபாண்டி - 12
    2.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆண்டிபாளையம் - 7
    3.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காஞ்சிபுரம் - 70
    4.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குப்பாண்டம்பாளையம் - 22
    5.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சந்திராபுரம் - 10
    6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செரங்காடு - 38
    7.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருக்குமரன் நகர் - 50
    8.நகராட்சி தொடக்கப்பள்ளி, கருவம்
    பாளையம் - 26
    9.நொய்யல் வீதி நகராட்சி தொடக்கப்பள்ளி - 15
    10.நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரண்
    மனைப்புதூர் - 15
    11.நகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம் - 23
    12.நகராட்சி நடுநிலைப்பள்ளி, காதர்பேட்டை - 5
    13.நகராட்சி நடுநிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர் - 21
    14.நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோல்டன் நகர் - 8
    15.நகராட்சி நடுநிலைப்பள்ளி, பெரிச்சிபாளையம் - 12
    16.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செல்லம்மாள் காலனி - 29
    17.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அனுப்பர்பாளையம் - 14
    18.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அய்யங்காளிபாளையம் - 30
    19.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாண்டியன்நகர் - 30
    20.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூலுவப்பட்டி - 4
    21.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குருவாயுரப்பன் நகர் - 20
    22.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போயம்பாளையம் - 40
    23.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் - 61
    24.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாமுண்டிபுரம் - 21
    25.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆத்துப்பாளையம் - 17
    26.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் - 15
    27.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சமத்துவபுரம் - 7
    28.நகராட்சி துவக்கப்பள்ளி, குமார்
    நகர் - 27
    29.நகராட்சி துவக்கப்பள்ளி, நெசவாளர் காலனி - 20
    30.நகராட்சி நடுநிலைப்பள்ளி, திருநீலகண்டபுரம் - 20
    31.நகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, மாஸ்கோ நகர் - 22
    32.நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவாங்கபுரம் - 15
    33.நகராட்சி நடுநிலைப்பள்ளி, சந்திரகாவி - 24
    34.நகராட்சி நடுநிலைப்பள்ளி, எஸ்.வி., காலனி - 13
    35.நகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரானந்தபுரம் - 15
    36.நகராட்சி நடுநிலைப்பள்ளி, பால
    முருகன் நகர் - 14
    37.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்மாபாளையம் - 20
    38.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கணபதிபாளையம் - 15
    39.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாதப்பூர் - 12
    40.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, க.அ. காலனி - 17
    41.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாச்சிபாளையம் - 20
    42.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரியவாளவாடி - 4
    43.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சுண்டக்காம்பாளையம் - 5
    44.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கண்ணம்மநாயக்கனூர் - 5
    45.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணக்கம்பாளையம் - 4
    46.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எலையமுத்தூர் - 4
    47.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிவசக்தி காலனி - 4
    48.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிளுவன்காட்டூர் - 4
    49.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காமராஜ்நகர் - 4
    50.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அந்தியூர் - 4
    51.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூளவாடி - 11
    52.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குமரலிங்கம் மேற்கு - 13
    53.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வீராச்சிமங்கலம் - 30
    54.நகராட்சி நடுநிலைப்பள்ளி, வாளையக்கார தெரு, தாராபுரம் - 58
    55.நகராட்சி நடுநிலைப்பள்ளி, சித்த
    ராவுத்தன்பாளையம் - 36
    56.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அலங்கியம் - 25
    57.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தளவாய்பட்டணம் - 16
    58.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தொட்டிபாளையம் - 5
    59.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாகமநாயக்கன்பட்டி - 2
    60.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காமராஜபுரம் - 5
    61.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செம்மாண்டம்பாளையம் - 12
    62.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
    மங்களாம்பட்டி - 2
    63.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அய்யம்பாளையம் - 4
    64.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
    உத்தமபாளையம் - 16
    65.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
    உப்புப்பாளையம் - 15
    66. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, துரை ராமசாமிநகர் - 20
    67.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
    லக்கமநாயக்கன்பட்டி - 17
    68.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கம்பளியம்பட்டி - 11
    69.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் கிழக்கு - 26
    70.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வெள்ளகோவில் மேற்கு - 26
    71.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னமுத்தூர் - 30
    72.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத்தூர் - 45
    73.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்.கே.சி., நகர் - 10
    74.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தீத்தம்பாளையம் - 25
    75.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சொரியன்கிணத்துப்பாளையம் - 19
    76.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூலனூர் - 9
    77.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதியார் நகர் - 20
    78.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காங்கயம் - 22
    79.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
    களிமேடு - 10
    80.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
    படியூர் - 20
    81.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஊத்துக்குளி நகர் - 40
    82.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊத்துக்குளி ரயிலடி - 33
    83.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செங்கப்பள்ளி - 3
    84.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குன்னத்தூர் - 43
    85.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்ன பூளவாடி - 4

    திருப்பூர் மாவட்டத்தில் 94 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; 1,597 மாணவர்கள் சேர்க்கை

    ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், மொத்தம் 94 பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழி இணைப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 85 பள்ளிகளில், இதுவரை 1,597 மாணவர்கள் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து சேர்க்கை நடந்து வருவதால், மீதமுள்ள ஒன்பது பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதனால், மாணவர் சேர்க்கை மேலும்
    உயரும், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    முப்பருவ கல்வி முறைக்கு"நோட்ஸ்'கள்பறிபோகும் ஆசிரியர்கள் கற்பனை திறன்

    பள்ளி பாடங்களுக்கு"நோட்ஸ்கள்' வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது.பாடச்சுமையை குறைக்க, 2012 முதல் முப்பருவ கல்வி, தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது 1 முதல் 8 ம் வகுப்பு நடைமுறையில் உள்ளது.

    மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயதுஉயர்த்தப்படாது என அறிவிப்பு

    மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை, 62 ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் தற்போதைய அரசில் இல்லை' என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பான, நல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, மத்தியப் பணியாளர் நலத் துறை வசம் உள்ளது. ஊழியர்களின் தனிப்பட்ட புகார்கள், பென்ஷன் தாரர்களின் கோரிக்கைள் ஆகியவற்றை இந்த துறை தான் கவனித்து வருகிறது. 



    கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்: பல்லம் ராஜூ

    கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறும்போது, கல்வித்துறையில் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தைகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    2013 – 2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

    1. தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல்.
    2. இயல்பாகவே புதிய பள்ளிச் சூழ்நிலை அவர்களுக்கு ஒருவித அச்சத்தையும், தயக்கத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தும். (சிலரால் நமக்கே ஏற்படும் என்பதும் உண்மை!) அதைத் தவிர்க்க ஆவன செய்தல்.



    இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்

    இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. 


    அரசு பள்ளிகளில் டி.இ.டி., விண்ணப்ப விற்பனைக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

    மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நாளை (17ம் தேதி) முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பம் விற்பனை மையமாக, பள்ளிகளை பயன்படுத்துவதை, உடனே நிறுத்த வேண்டும் என்றும், இதனால், கல்விப்பணி கடுமையாக பாதிக்கும் என்றும், தலைமை ஆசிரியர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


    Friday, June 14, 2013

    S.S.A - 6 முதல் 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் (A.L.M )கல்வி கட்டாயமாக நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்- படுத்தாத பள்ளிகளின் விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

    CLICK HERE TO DOWNLOAD அனைவருக்கும் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - ந.க.எண் - 1946 /  அகஇ / அ7 / 12 நாள் .14.6.2013


    T.N.P.S.C - APPLY FOR POSTS INCLUDED IN GROUP-VI SERVICES TOTAL VACANCY - (5566 VACS)

    IMPORTANT INFORMATION
    DATE OF NOTIFICATION LAST DATE FOR SUBMISSION OF APPLICATION LAST DATE FOR PAYMENT OF FEE THROUGH BANK OR POST OFFICE DATE OF WRITTEN EXAMINATION NO. OF VACANCIES
    14.06.2013 15.07.2013 17.07.2013 25.08.2013 5566
    IMPORTANT LINKS
    1
    2
    3
    4
    5

    பள்ளி மாணவர்களுக்கு,தினமும் அரசு போக்குவரத்து கழகம் மூலம், எவ்வளவு பஸ் பாஸ் : விபரம் அனுப்ப அரசு உத்தரவு

    பள்ளி மாணவர்களுக்கு,தினமும் அரசு போக்குவரத்து கழகம் மூலம், எவ்வளவு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது,' என்ற, அறிக்கையை அனுப்ப, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.



    விடைத்தாள்களை ஒழுங்காக திருத்தாத ஆசிரியர்களுக்கு தண்டனை : பிளஸ் 2 தேர்வு முடிவு குளறுபடியில் அரசு நடவடிக்கை


    ""பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, "17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.



    வணிகவியல், பொருளியல் பட்டதாரிகள் டி.இ.டி., தேர்வை எழுத முடியாது

    வணிகவியல், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, அதன்பின், பி.எட்., முடித்தவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத முடியாது.


    தொடக்க நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கான சி.ஆர்.சி மையக் கூட்டங்களும் பணியிடைப் பயிற்சியும்:


    தொடக்க நடுநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு 2013-14 ஆம் ஆண்டிற்கான பணியிடைப் பயிற்சிகள் மற்றும் மாதாந்திரக் கூட்ட மையங்களை நடத்துவதற்கான முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள SCERT மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி & பயிற்சி நிறுவனங்களை கல்வித்துறைச் செயலகம் அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
    இதனடிப்படையில் DIET விரிவுரையாளர்கள் இந்த வாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் தலா ஒரு கருத்துக் கேட்புப் படிவத்தைக் கொடுத்து பலவுள் தெரிவு அடிப்படையில் அச்சிடப்பட்டிருந்த வினாப்பட்டிகளைப் பூர்த்தி செய்து பெற்றுச் சென்றனர். இதில் எந்த மாதிரியான பயிற்சிகள் தேவைப்படுகின்றன எனக் கேட்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் பெற்ற படிவங்களைத் தொகுத்து பெரும்பான்மையானோர் கேட்டுள்ளவாறு பயிற்சி நடத்தப் பரிந்துரைத்து தொகுப்பறிக்கையை இந்த வார இறுதிக்குள் SCERT மூலமாக செயலகத்திற்குச் சமர்ப்பிப்பதாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அதனால் குறுவள மையக் கூட்டங்கள் (சி.ஆர்.சி) மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ள வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்தப்படலாம்.

    Thursday, June 13, 2013

    PROVIDENT FUND – Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund ¬– Rate of interest for the year 2010-2011 and 2011-2012 – Orders issued.

    TO DOWNLOAD தமிழக அரசின் அரசாணை எண் - G.O.No. 198 Dt: June 12, 2013

    T.N.P.S.C ( டி.என்.பி.எஸ்.சி )., குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு

    டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிவித்துள்ளதாவது: தட்டச்சர், எழுத்தர், வரிதண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான TNPSC குரூப்-4 தேர்வு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுலை 15. மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது.

    மாநிலமெங்கும் தேர்வு நடைபெறும் மொத்த மையங்கள் 258. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர், தேர்வாணைய இணையதளம் சென்று, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

    கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான பணிக்காண முறையான அறிவிப்பு வெளியீடு - TRB ( Direct Recruitment of Assistant Professor of Govt. Arts and Science Colleges for the year 2012 - 2013 )

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Click here for Direct Recruitment of Assistant Professor in Govt. Arts and Science Colleges - 2012 - NOTIFICATION

    ஆசிரியர் தகுதித் தேர்வு - 2012 -2013 முறையான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வாணையம் ( Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013 )

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Click here for Tamil Nadu Teachers Eligibility Test for the year 2012 - 2013 - NOTIFICATION

    Wednesday, June 12, 2013

    வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் அரசு மேல்நிலை பள்ளிகளில் விற்பனை

    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வரும் 17ம் தேதி முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் விற்கப்பட உள்ளன. ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு: 


    பள்ளிகள் திறந்த நாளில் பாடப்புத்தகங்கள்: பள்ளிக்கல்வித்துறையால் விபரம் சேகரிப்பு

    தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.



    ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள்: ஜூன் 17ல் விற்பனை

    ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது, தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. 2010 ஆக., முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், தகுதி தேர்வு எழுத வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இரு தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. 


    Private Schools Fee Determination Committee Fee Fixed for the year 2013-2016

    Justice Thiru S.R Singaravelu,
    Chairman, Private Schools Fee Determination Committee, Chennai - 600 006.
    Fee fixed for the year 2013-2016
    District wise Particulars
    District
    Ariyalur Fixation
    Chennai Fixation
    Coimbatore Fixation
    Cuddalore Fixation
    Dharmapuri Fixation
    Dindigul Fixation
    Erode Fixation
    Kancheepuram Fixation
    Kanyakumari Fixation
    Karur Fixation
    Krishnagiri Fixation
    Madurai Fixation
    Nagapattinam Fixation
    Namakkal Fixation
    Perambalur Fixation
    Pudukkottai Fixation
    Ramanathapuram Fixation
    Salem Fixation
    Sivagangai Fixation
    Thanjavur Fixation
    The Nilgiris Fixation
    Theni Fixation
    Thiruvallur Fixation
    Thiruvarur Fixation
    Tiruchirappalli Fixation
    Tirunelveli Fixation
    Tiruppur Fixation
    Tiruvannamalai Fixation
    Tuticorin Fixation
    Vellore Fixation
    Villupuram Fixation
    Virudhunagar Fixation

    தொடக்கக் கல்வி துறை - 2013 - 14 - ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வி தொடங்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    click here download to தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்/11640/இ1/2012 நாள்    .6.2012

    Tuesday, June 11, 2013

    257 அரசுப்பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவக்கம்

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மொத்தம் 257 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1200 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், திருப்பூர் வடக்கு 27, திருப்பூர் தெற்கு 12, அவிநாசி 18, ஊத்துக்குளி 10, உடுமலை 9, வெள்ளக்கோவில் 6, தாராபுரம் 5, காங்கேயம் 4, பொங்கலூர் 3 என மொத்தம் 94 பள்ளிகளில் ஆங்கில மீடியம் வகுப்புகள் துவங்கப்படுகின்றன


    ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு

    பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.கிராமங்களில் நிலவும் வறுமை காரணமாக, பெண் குழந்தைகள் பலரும், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், ஆரம்பப் பள்ளி அளவிலேயே, படிப்பை நிறுத்தி வந்தனர்.


    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள்

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே, இதன் நோக்கம். அதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் படிப்பு, தொழில் கல்வி, மாற்றுத் திறனாளிகள் கல்விக்கு முக்கியத்துவம், மாணவியர் விடுதிகள் அமைப்பது என, நான்கு திட்டங்களை அமல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல், ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, பாட ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கு பின், பயிற்சி வழங்கினால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பயிற்சியை, ஜூலையில் துவங்கி, ஆகஸ்டில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் TNPSC குரூப்–4 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்

    அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

    5,500 காலி இடங்கள்



    அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

    அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அரசு பள்ளிகளில் நலத்திட்டங்கள்



    Monday, June 10, 2013

    IGNOU Recruitment 2013 – 126 Teaching Posts:

    Name of the posts: 
    1. Professor: 27 Posts
    2. Associate Professor: 36 Posts
    3. Assistant Professor: 63 Posts

    Application form: Candidates can download the application from the web site www.ignouu.ac.in or can be obtained by post by enclosing a self addressed envelope and affixing postal stamps of Rs.50/- on the envelope from 10-07-2013 and send to the Director, Academic Coordination Division, 1st floor, Room No.109, Beside VC Office, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi-110068.
    Application Fee: Candidates need to pay the fee of Rs.200/- for General & OBC candidates and Rs.50/- from SC/ST candidates in the form of Demand draft drawn in favour of “IGNOU” and payable at New Delhi.
    How to apply: Interested Candidates may send their filled in prescribed application form along with all relevant documents to the Director, Academic Coordination Division, 1st floor, Room No.109, Beside VC Office, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi-110068 so as to reach on or before 31-07-2013
    Important Dates:
    Date of Issue of Application form: 10-07-2013
    Last Date for Submission of Application: 31-07-2013
    For more details regarding age, qualifications, pay scale, selections and other information click on the below link…

    IGNOU - M.ED Programme - January 2014 Admission Announced

    திருப்பூர் மாவட்டத்தில் 20 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து

    திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 231 நர்சரி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாவட்ட துவக்க கல்வி அலுவலகத்தில் தரச்சான்றுக்கான அங்கீகாரம் பெற வேண்டும். 


    தனியார் பள்ளிகள் இட பிரச்னை: இம்மாத இறுதிக்குள் அறிக்கை

    தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர் குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.


    இலவச பாஸ் வழங்கும் வரை மாணவர்களுக்கு கட்டண பயணம் - தினகரன் நாளிதள் செய்தி

    பேருந் தில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச பாஸ் வழங்கும் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. 



    அனைத்து வகையான பள்ளிகளிலும் 12.6.2013 ( புதன்) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் - உத்தரவு

    click here to DOWNLOAD  பள்ளிக் கல்வி செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

    முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.


    அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை மக்களே கண்காணிக்கலாம்

    அரசு ஊழியர்களின் பணி செயல்பாடுகள் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களே கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அவர்களின் கடமைகளில் இருந்து தவறுகிறார்களா என மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

    Saturday, June 8, 2013

    பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு: ஆய்வில் தகவல்

    அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


    Friday, June 7, 2013

    Post Graduate Teacher in Tamil Nadu Higher Secondary Educational Service - RESULT PUBLISHED

    CLICK HERE GET YOUR RESULT

    காலாண்டுத் தேர்வுக்குள் பள்ளிகளின் தரம் உயர்த்தாவிட்டால் நடவடிக்கை - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிச் செயலர் எச்சரிகை


    தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி

    பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த கல்வியாண்டு ஜூன் 10-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தக் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


    எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

    இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.

    ஜூன் 2013-ல் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி

    ஜூன் 2013-ல் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசத் தேர்வுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஜுன் 2013ல் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

    Thursday, June 6, 2013

    தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி: தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதிகாரிகள் "ரெய்டு'

    பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.


    ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய 1.12 லட்சம் தமிழ் மாணவர்கள் கல்வித்துறை அதிர்ச்சி

    ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால், ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில், தமிழ் வழியில் சேர வேண்டிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கு சென்றுள்ளது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.


    உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது என்ற பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது:

    இந்த கல்வி ஆண்டில் (2013–2014) உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை பட்டியலையும், எந்தெந்த சனிக்கிழமைகள் வேலைநாட்கள்? என்ற பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 210 வேலைநாட்கள்பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு கல்வி ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) 210 வேலை நாட்களும், அதேபோல் தொடக்கக்கல்வித்துறைக்கு உட்பட்ட ஆரம்ப பள்ளிகள், 


    Wednesday, June 5, 2013

    அரசு ஊழியர்கள் - குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை மற்றும் விளக்கம்

    பள்ளி வாகனங்களில், அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வது குறித்து, புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்து துறை

    ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறை மண்டலங்களில், பள்ளி வாகனங்களை சோதனை செய்யும் பணி நடந்தது. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும், ஆட்டோக்களில், 12 வயதுக்கும் குறைவான வயது உடைய, மாணவ, மாணவியர் இருப்பின், ஐந்து பேரை மட்டுமே, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.


    ஊதிய குறைத் தீர்க்கும் பிரிவின் இறுதி அறிக்கையை பரிசீலனை செய்ய உயர் அதிகாரிகள் குழு அமைக்கப் படவில்லை - தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பதில்

    CLICK HERE DOWNLOAD TO தகவல் பெரும் உரிமை சட்டத்தின் பதில் கடிதம்