கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, May 31, 2013

    தொடக்கக் கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி தொடக்கக்கல்வி ஆணை வெளியீடு

    CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - ந.க.எண் .13673/ஜே3/2013 நாள்  -5-2013

    அரசுபள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு அனைத்து இலவச பொருட்களும் வழங்க ஏற்பாடு

    அரசுமற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படாது.



    Thursday, May 30, 2013

    ஓய்வு நாளிலேயேய ஓய்வூதிய பலன் ; பேராசிரியர்களுக்கு புது திட்டம்

    பேராசிரியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் புதிய திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றபேராசிரியர்களுக்கான, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் விழா, சென்னை, புது கல்லூரியில்நேற்று நடந்தது. சென்னை மண்டலத்தில் உள்ள, 25 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரிந்த, 62பேராசிரியர்கள் இன்றுடன் ஓய்வு பெற உள்ளனர். 


    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

    தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

    www.dge1.tn.nic.in

     www.dge2.tn.nic.in

     www.dge3.tn.nic.in

    அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் குடும்ப திருமண விழாவை கொண்டாட, 2013-14 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.

    click here to download LOANS AND ADVANCES by the State Government – Advances to Government Employees for the Celebration of Marriages - Allotment of Funds for the year 2013 2014 – Order–Issued


    Wednesday, May 29, 2013

    2,881 முதுநிலை ஆசிரியர் பணி எழுத்து தேர்வு விண்ணப்பம் நாளை முதல் விநியோகம் - ஒரு பார்வை

    தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு 2,881 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி நடக்க உள்ளது. அதிகபட்சமாக தமிழ் ஆசிரியர் பணிக்கு 605 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆங்கிலத்துக்கு 347 பேரும், கணிதத்துக்கு 288 பேரும், இயற்பியலுக்கு 228 பேரும், வேதியியலுக்கு 220 பேரும், தாவரவியலுக்கு 193 பேரும், விலங்கியலுக்கு 181 பேரும், வணிகவியலுக்கு 300 பேரும், வரலாறுக்கு 173 பேரும், பொருளாதாரத்துக்கு 257 பேரும், புவி யியலுக்கு 21 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். உடற்கல்வி இயக்குன ருக்கு 17 பேரும், பயோ கெமிஸ்டிரி பாடத்துக்கு 16 பேரும், தெலுங்கு பாட ஆசிரியர் பணிக்கு 2 பேரும் அரசியல் அறிவியல் மற்றும் ஹோம் சயின்ஸ் பாடங்களுக்கு தலா ஒருவரும் தேர்வு செய்யப்படுகின்றனர்.இத்தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப படிவம் மற்றும் குறிப்பேட்டின் விலை ஸீ50 ஆகும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரையின்படி, எவ்வித தவறுமின்றி ஒஎம்ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தேர்வு கட்டண சலானுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கோ அனுப்ப கூடாது. அவ்வாறு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஜூன் 14ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதலில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2013 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவித்து உடன் பணியில் சேர இயக்குநர் உத்தரவு

    click here to download தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

    அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் உதவித்தொகை அதிகரிப்பு

    எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித் தொகை, இக்கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 


    10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

    தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

    www.dge1.tn.nic.in

     www.dge2.tn.nic.in

     www.dge3.tn.nic.in

    சிறப்பு ஆசிரியர்களுக்களின் உத்தேச பதிவுமூப்பு பட்டியல்

    உத்தேச பதிவுமூப்பு பட்டியல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் வெளியீடு,7–ந் தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்:சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர் (தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர்கள்) பணி காலி இடங்களுக்கு


    2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் விதியில் திருத்தம்


    2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

    திருத்தம்
    2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.

    15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும்
    காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்
    . இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின் படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்பொழுது பணிபுரியும் ஆசிரியர் / தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது.

    கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10ஆக மாற்றம் செய்தது, முறையான ஆணை வெளியீட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

    Tuesday, May 28, 2013

    கோடை விடுமுறைக்குப் பின் 2013-2014ம் கல்வியாண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் ஜூன் 10ஆக மாற்றம் செய்தது, முறையான ஆணை வெளியீட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

    click here to download   பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

    அரசு கலை மற்றும் கலை கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்கலுக்கான அறிவிப்பு வெளியீடு

    கீழே உள்ளே படத்தை click செய்யவும்


    clip thumb

    கற்கும் பாரதம் - திட்டத்தின் இலக்கை எய்திய ஒரே மாநிலம் தமிழகம்: முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்

    clcik here to download தமிழக அரசின் செய்திக்குறிப்பு ( மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் திரு.சசி தரூர் பாராட்டு கடிதம்

    பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல் வெளியீடு

    click here and get your பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல் (answer scripts.)


    கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

    1. விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க reference number.
    2. பதிவெண்
    3. பிறந்த தேதி
    4. மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டிஎம்ஆர் கோட் விவரம்


    மற்ற பாடங்களுக்கான விடைத்தாளின் நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் நாள்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரிகளில் தமிழிலும் தேர்வு எழுதலாம் முதல்வர் அறிவிப்பு

     http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr280513c.jpg


    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தங்களது தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Sunday, May 26, 2013

    2013 - 2014 ஆம் கல்வியாண்டில் பள்ளிதிறக்கும் நாளன்று மாணவர்களுக்கு நலத்திட்டங்க்கள் சென்றடைய வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு



    தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல்

    தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.


    ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்வில்மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

    மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, தற்போது உள்ளது.


    Saturday, May 25, 2013

    தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு 28ந் தேதி தொடக்கம்

    28ந் தேதி முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் நடைபெறுகிறது. மேலும் அன்று நடுநிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணையும் வழங்கப் படுகிறது.

    அன்று பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத் திற்குள் மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது.

    29ந் தேதி

    29ந் தேதி முற்பகல் தொடக்க பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங் கப்படுகிறது.

    30ந்தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் வழங்கப்படுகிறது. அன்று பிற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் வழங்குதல்(ஒன்றியம் விட்டு ஒன்றியம் ) நடைபெறுகிறது.

    31ந் தேதி முற்பகல் இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கப்படுகிறது.

    ஆங்கிலத்தில் தேர்வு - கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு

    "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்" என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்" மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


    கல்லூரி படிப்புகளுக்கு கல்விகடன் கட்டண பட்டியல் வெளீயீடு


    2013-14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை

    2013-14ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


    முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்தாய்வு

    பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196பேர், இளநிலை உதவியாளர்கள், 310பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி), "ஆன்-லைன்' மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.


    உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு


    Thursday, May 23, 2013

    REGULAR B.Ed - உண்மைத் தன்மைச் சான்று (Genuinneness) பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை.

    ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு ....


    தனியார் பள்ளிகளில் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை

    தனியார் பள்ளிகளில் உள்ள இட பரப்பளவிற்கு ஏற்ப, எத்தனை மாணவ, மாணவியர் வரை அனுமதிக்கலாம் என்பதை, வரையறுக்க வேண்டும்' என, தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழுவிடம், பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.


    வரும், 2014 - 15ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கும், 2015 -16ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத் திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. பாடத் திட்டம் குறித்து, கருத்துக்களைத் பொதுமக்கள் வரும், 30ம் தேதி வரை தெரிவிக்கலாம்

    Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std

    Accountancy
    download                             
    Advance Tamil
    download
    Bio-Botany 
    download
    Bio-chemistry
    download
    Bio-Zoology
    download
    Business Mathematics
    XI , XII
    Chemistry 
    download
    Commerce
    XI-1 , XI-2 , XII-1 , XII-2
    Communicative English
    download
    Computer Sciene 
    download
    Economics
    download
    English
    download
    Ethics & Indian Culture
    download
    Geography
    download
    History
    download
    Home Science 
    download
    Mathematics 
    download
    Microbiology 
    download
    Nursing 
    download
    Nutrition & Dietetics 
    download
    Physics
    download
    Political Science
    download
    Statistics 
    download
    Tamil 
    XI , XII

    தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு விவகாரம் * அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை

    தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர் நிலை குறித்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித் துறை, அறிக்கை சமர்ப்பித்தது. 


    உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் கலந்தாய்வு *கோர்ட் தடையால் நிறுத்தி வைப்பு

    உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி  உயர்வு கலந்தாய்வில், தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் பாதிக்கும்படியான குளறுபடியான உத்தரவால், கோர்ட் தடை விதித்தது; இதையடுத்து, கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், ..


    2013-2014 -மாநில கல்வியல் ஆராய்சி பயிற்சி நிறுவனம் தொடக்கக்கல்வி பட்டைய படிப்பிற்கான விண்ணப்படிவம்

    CLICK HERE TO download தொடக்கக்கல்வி பட்டைய படிப்பிற்கான விண்ணப்படிவம்

    9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

    IX Standard CCE Co Scholastic Manual
    IX Standard CCE Physical Education Manual
    IX Standard CCE Social Science Manual
    IX Standard CCE Science Manual
    IX Standard CCE Maths Manual
    IX Standard CCE English Manual
    IX Standard CCE Tamil

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ( CTET ) - Check Application Status

    CTET - Check Application Status

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ( C.T.E.T) தேர்வு கால நேரம் 1:30 லிருந்து 2:30 மணி நேரமாக மாற்றம்


    CLICK HERE download to CTET July 2013 - Time duration increased to complete CTET Exam 

    Wednesday, May 22, 2013

    ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் டி.இ.டி., ( TET) தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

    தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் : ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.


    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ல் மாணவர்களுக்கு இலவச பஸ் "பாஸ்' தாமதமின்றி வழங்க உத்தரவு

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ல் பள்ளிகள் துவங்குகின்றன. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு பஸ் "பாஸ்' வழங்குவது தாமதமாகிறது. சில பள்ளிகளில் ஒரு மாதம் வரை கூட "பாஸ்'வழங்காத நிலை கடந்த ஆண்டு இருந்தது.


    டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் குறைப்பு இல்லை : தமிழக அரசு கைவிரிப்பு

    டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்' என, சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தியபோதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.


    பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்

    பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அம்மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா தலைமையிலான, "பெஞ்ச்' முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முறையான கல்வி தகுதியில்லாதவர்களை, தற்காலிக ஆசிரியர்களாக நியமிப்பது, கல்வி முறையின் அடிப்படையையே பாழாக்கி விடும்; பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டே கல்வி கற்பிக்க வேண்டும். வழக்கமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் நடைமுறை, அவர்களுக்கான சம்பளம் விகிதம் குறித்த விவரம் தரவேண்டும். குஜராத் அரசு மேற்கொள்ள உள்ள, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

    +2 உடனடி தேர்வு ஜூன் 2013 கால அட்டவணை

    CLICK HERE TO DOWNLOAD +2 தேர்வு  கால அட்டவணை

    490 ஆசிரியர்களுக்கு "எச்.எம்., புரமோஷன்' பள்ளி திறந்ததும் பணியில் சேர உத்தரவு

    அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும், பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.


    அரசு துறை தேர்வுகளுக்கு "ஹால் டிக்கெட்' வெளியீடு

    இம்மாதம், 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, துறை தேர்வுகள் நடக்கின்றன. பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், பதவி உயர்வுக்காக, இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, பதிவு செய்த தேர்வர்களுக்கு, ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    Departmental Examinations, May, 2013

    Memorandum of Admission (Hall Ticket)
    (Dates of Examinations: 24.05.2013 to 31.05.2013)

    click here TO DOWNLOAD அரசு துறை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்

    திருப்பூர் மாவட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல், 97 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி பாடம் துவங்குகிறது

    தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வியை கட்டாயம் துவக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 100 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில், 97 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவங்க, அனுமதி கிடைத்துள்ளது.அவிநாசி ஒன்றியம் - 19 பள்ளிகள், ஊத்துக்குளி - 10, தாராபுரம் - 5, வெள்ளகோவில் - 6, காங்கயம் - 4, திருப்பூர் தெற்கு - 1, திருப்பூர் வடக்கு - 26, பல்லடம் - 1, உடுமலை - 9, பொங்கலூர் - 3, மடத்துக்குளம் - 6, குடிமங்கலம் - 6, மூலனூர் - 1 ஆகிய இடங்களில், ஆங்கில வழி பாடம் துவங்கப்படுகிறது. வரும் ஜூன் 3ல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பள்ளி களில், ஆங்கில வழி கல்வியை துவங்க, கல்வித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் உள்ளனர்.

    2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.

    தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.

    தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.

    பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் முறையாகச் செயல்பட நடவடிக்கை - SSA இயக்குநர் பேச்சு

    click here to தினமணி நாளிதள் செய்தி

    10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி - பாடவாரியாக காலிப்பணியிட விவரம்


    TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள் அறிவிப்பு

    விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
    விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் ஜூலை 1.

    தேர்வு நாட்கள்:

    தாள் 1 ஆகஸ்ட் 17 (இடைநிலை ஆசிரியர்களுக்கானது)

    தாள் 2 ஆகஸ்ட் 18 (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது)


    Monday, May 20, 2013

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் - பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன்

    தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.


    Saturday, May 18, 2013

    தமிழ் நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

    DEE - MIDDLE SCHOOL HM TO AAEEO / AEEO COUNSELING HELD AT DEE, CHENNAI ON 25.05.2013 REG - PROC CLICK HERE...

    தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் - சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.

    click here to download தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முரைகள்

    பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்

    தமிழக ஒட்டு மொத்த வரலாற்றில் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்காக நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


    பொது மாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஜீன் 3 தேதி பணியில் சேர உத்தரவு

    வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

    தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20 லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.


    Friday, May 17, 2013

    2013-14 - AEEO (உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்) பணியிடத்திற்கு பணிமாறுதல் மூலம் தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 01.01.2013ன் படி முன்னுரிமைப்பட்டியல் தொடக்கக் கல்வித்துறை வெளியீடு

    click here to download the DEE proceeding of Middle HM to AEEO Post Seniority List as on 01.01.2013

    click here to download the Middle HM to AEEO Post Seniority List as on 01.01.2013 in Tamil Language 

    கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது

    கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது. புத்தக விலை உயர்வு விவரம் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (பழைய விலை அடைப்புக்குறிக்குள்)

    2–ம் வகுப்பு – ரூ.65 (ரூ.60)

    3–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)

    4–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)

    5–ம் வகுப்பு – ரூ.100 (ரூ.80)

    6–ம் வகுப்பு – ரூ.105 (ரூ.80)

    7–ம் வகுப்பு – ரூ.140 (ரூ.100) 8–ம் வகுப்பு – ரூ.165 (ரூ.100)

    தனியார் அச்சகங்களுக்கு வேண்டுகோள் இதற்கிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை (தமிழ் நீங்கலாக) அச்சிட விரும்பும் தனியார் அச்சகங்களிடம் இருந்து மாநில பொது பள்ளிக்கல்வி வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தனியார் அச்சகங்கள் வருகிற 24–ந் தேதிக்குள் 2 பிரதி வரைவு புத்தகங்களை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தவவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - SSA- பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு தற்செயல் விடுப்பும் (CL) தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மிகாமல் , வருடத்திற்கு 3 வரையறுக்கப்பட்ட விடுப்பும் (RH) மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு நிலையான பயனப்படி மாதம் ரூபாய்.600

    ரூ.5 ஆயிரம் மாத சம்பளத்தில் 1,900 பகுதிநேர ஆசிரியர் நியமனம் சான்று சரிபார்ப்பு பணி துவங்கியது

    தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.எனினும் பணியை விட்டு விலகியவர்கள், பணியில் சேராதவர்கள் என மாநிலம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியானது. இந்த இடங்களை நிரப்பும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. 


    கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் வேலை டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

    click here to download NOTIFICATION JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN CO-OPERATIVE DEPT. IN T.N.CO-OP.SUB. SERVICE

    CLICK HERE TO Apply Online

     கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. * கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 3ம் தேதி, போட்டித்தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.


    நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்

    ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. 


    ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு முன்னுரிமை *அரசு செயலர் உத்தரவு

    ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்,'' என, பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக, தங்களது பதிவு மூப்பு விபரங்களை, சி.இ.ஓ., ஆபீஸ் மூலம், ஆன்-லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவும், இன்றுடன் முடிந்து விடும். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மே 28 முதல் பணியிடமாறுதல் கவுன்சிலிங் அந்தந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
     

    முன்னுரிமை: கடந்த ஆண்டு வரை, ஆசிரியர் இடமாறுதல் செய்யும் போது, முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்திற்கு முதலில் முன்னுரிமை தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு (2013-14) கவுன்சிலிங்கில், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் , மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை வழங்கவேண்டும். அதற்கு பின்னரே, முன்னாள் ராணுவத்தினர், பிற பிரிவினருக்கு முன்னுரிமை தரவேண்டும். மேலும், புகாரின் பேரில், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு முதலில் நிர்வாக காரணத்திற்கான இடமாறுதல் உத்தரவை வழங்க வேண்டும். பின்னர், அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து, புகாரின் மீது ஆதாரம் இருந்தால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், பணியிட மாறுதல் ஆவணத்தில், புகாரின் பேரில் ஆசிரியருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதாக குறிப்பிடவேண்டும். இது போன்ற ஆசிரியர்கள் குறித்து சி.இ.ஓ., அறிக்கைபடி, இயக்குனர் மாறுதல் செய்வார்.


    சிறப்பு நிகழ்வாக, கணவன் அல்லது மனைவி திடீரென விபத்து அல்லது நோய்வாய்பட்டு இறக்கநேரிட்டால், அத்தகைய ஆசிரியர்களுக்கு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் விதிமுறையை கடைபிடிக்காமல், நேரடியாக பணியிடமாறுதல் வழங்கலாம். இது குறித்து இயக்குனருக்கு அறிக்கை வழங்க வேண்டும். இது போன்று, ஆசிரியர் கவுன்சிலிங்கில் கடைபிடிக்குமாறு, பள்ளிக்கல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை - கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது .

    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் 2014ம் ஆண்டிற்கான பி.எட் விண்ணப்பங்கள் கல்வி மையத்தில் வழங்கப்படுகிறது. ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றவர்கள், 2 ஆண்டு அனுபவம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை மாதம் 27ம் தேதி கடைசி நாளாகும்.


    ஒன்பதாம் வகுப்பிற்குறிய முதல் பருவ பாடத்திட்டம் வெளீயீடு

    COMMON SYLLABUS
     I TERM
    CLASS IX
    Subject    
    English    
    Tamil    
    Mathematics English Version Tamil Version
    Science English Version Tamil Version
    Social Science English Version Tamil Version

    Thursday, May 16, 2013

    2013 - 2014 ம் கல்வியாணடில் ஆங்கில வழிக் கல்வி சேர்க்கை விகிதம் குறைப்பு - நாளிதழ் செய்தி


    பள்ளிகல்வி துறை 2013-2014 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் அட்டவணை

    பள்ளிகல்வி துறை 2013-2014 ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் அட்டவணை click here ....

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி நடந்த 55 காலியிடங்களுக்கான T.N.P.S.C., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

    CLICK HERE TO DOWNLOAD குரூப் 1 தேர்வு முடிவுகள்

    2013 - 2014ம் ஆண்டில் அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்

    அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.அரசு ஊழியர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளத்தின் மூலம், மேலாண்மை தகவல் முறையில், பணியாளர்களின் விவர எண்ணிக்கை, சம்பளம் மற்றும் அதை சார்ந்த பிற விவரங்களை பெற, வலைதள பட்டியல் மென்பொருள் உருவாக்கப்படும்..



    விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்



    கல்வித்துறை மூலம் வழங்கப்படும், விலையில்லா பொருள்களை கொள்முதல் செய்து வினியோகிக்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா பொருள்கள் வழங்கப்படுகின்றன. இப்பொருள்களை, கொள்முதல் செய்து வினியோகிக்கும் பணி, தமிழ்நாடு பாட நூல் கழகத்துக்கு வழங்கப்படும். இதற்கு ஏதுவாக, இதன் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்' என, மாற்றப்படும்.



    Wednesday, May 15, 2013

    தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள்+24 பள்ளி தேர்வு நாட்கள் =207 கணக்கீடு:

    தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி
    மொத்தம் 210 வேலைநாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்று உள்ளூர் விடுமுறை நாட்கள், 24 பள்ளி தேர்வு நாட்கள் போக மீதம் 183 நாட்கள் கற்பித்தல் நாட்களாகும்.இதில் வரும்
    ஜூன் மாதம் 20 நாட்கள்,
    ஜூலை மாதம் 23,
    ஆகஸ்ட் மாதம் 19,
    செப்டம்பர் மாதம் 15 நாட்கள்,
    அக்டோபர் மாதம் 19 நாட்கள்,
    நவம்பர் மாதம் 21,
    டிசம்பர் மாதம் 17,
    வரும் ஆண்டு ஜனவரி மாதம் 19 நாட்கள்,
    பிப்ரவரி மாதம் 21 நாட்கள்,
    மார்ச் மாதம் 21 நாட்கள்,
    ஏப்ரல் மாதம் 16 நாட்கள் வேலை நாட்களாகும்.



    அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம் - தினகரன் நாளிதழ்

    வரும் கல்வி ஆண்டில் (2013-14) இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.


    Tuesday, May 14, 2013

    தமிழ்நாடு பாடநூல் கழகம் பெயர் மாற்றம்

    தமிழ்நாடு பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பாடநூல் கழகம் இனிமேல்,

     தமிழ்நாடு கல்வியியல் கழகம் 

      என்ற பெயரில் செயல்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் பணியை, தமிழ்நாடு கல்வியியல் கழகம் செய்யும் எனவும் அறிவித்தார்.

    தமிழகத்தில் புதிதாக 54 துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும் - தமிழக முதல்வர் அறிவிப்பு

    click here to DOWNLOAD பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கான தமிழக அரசின் செய்திகுறிப்பு.

    தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார்.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24 ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2011 - 12 - Certificate Verification for Tamil Medium Candidates click here

    11.5.2013 அன்று தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் நடத்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் கூட்டப் பொருள் அறிக்கை


    ஆதி திராவிடர் மாணவியர் விடுதிக்கு 'வாஷிங் மிஷின்' முதல்வர் அறிவிப்பு


    2012 - 2013 சிறப்பு ஆசிரியர்களுக்கான முறையான அறிவிப்பு

    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Direct Recruitment of Special Teacher for the year 2012 - 2013
                                     

    Click here for advertisement

    2012 -2013 - முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு முறையான அறிப்பு வெளியீடு

     
    Teachers Recruitment Board
     College Road, Chennai-600006

    Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
                                     
               Click here for advertisement  
     
              

    Dated: 09-05-2013
     
    Chairman
    Home

    Monday, May 13, 2013

    ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் அடுத்த வாரம் முதல் வழங்கல்

    ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, 625 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.


    தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் 11.05.2013 தேதியிட்ட நெறிமுறைகளின்படி, இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வானது, தற்போதைய கலந்தாய்வின் போது நடைபெறாது.

    click here to DOWNLOAD தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 02898/டி1/2013 நாள் .11.5.2013

    திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வருமாறு:

    மாறுதல் விண்ணப்பம் அளித்தல்: 13.05.2013 முதல் 17.05.2013 முடிய.

    பேணல் சரிபார்த்தல் : 18.05.2013

    மாறுதல் விண்ணப்பங்களை DEEO -வசம் அளித்தல்:20.05.2013

    24.05.2013- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

    25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்

    28.05.2013 காலை-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு

    28.05.2013 மதியம்-பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

    29.05.2013 காலை-தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்

    29.05.2013 மதியம் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

    30.05.2013 காலை - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

    30.05.2013 மதியம் - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)

    31.05.2013 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    2013 - 2014 கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.



    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - 2013 - 2014 பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வகுத்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

    click here to DOWNLOAD தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 02898/டி1/2013 நாள் .11.5.2013

    ஆசிரியர்களின் பொது மறுதலுக்கான விண்ணப்ப படிவங்கள்.மற்றும் கலந்தாய்வு அட்டவணை


     

    2 .பள்ளிக்கல்வி துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].

     

    3.தொடக்கக்கல்வித்துறை&பள்ளிக்கல்வித்துறைஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 அட்டவணை 


    4.தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் (17.05.2013) சமர்பிக்கலாம் 


    5.தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் | Mutual Transfer Application Model

    தொடக்கக் கல்வித் துறையில் இன்று முதல் 13.5.2013 முதல் விண்ணப்பிக்கலாம்- கடைசி நாள் 17.5.2013


    Sunday, May 12, 2013

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு - அமைச்சர் தகவல்


    T.N.P.S.C தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்


    கட்டணம் என்ற பெயரில், டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும், தேர்வர்களிடம் இருந்து, அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

    டி.ஆர்.பி., வசூல்:டி.ஆர்.பி., அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக, விண்ணப்ப கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை, வசூலிக்கிறது. பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு, பல வகையான தேர்வுகளை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., அதிகபட்சமாக, 125 ரூபாயைத் தான், தேர்வுக் கட்டணமாக வசூலிக்கிறது.


    2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் ONLINE மூலமாக நடத்தப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக 14.05.2013 முதல் 18.05.2013 முடிய ஒப்படைக்க வேண்டும்.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண் 183 /ஏ1/இ2/2013 நாள்:11.05.2013 ன் படி பள்ளிக்கல்வித்துறை  2013-2014ம் கல்வியாண்டில் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்தான அறிவுரை கிழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.

      *2013-2014ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் இணைய தளத்தின் மூலமாக வழங்க வேண்டும்.

    *2013-2014ம் கல்வியாண்டின் பொதுமாறுதலுக்கான அரசாணை (1டி) எண். 129 பள்ளிக் கல்வி (இ1) துறை நாள்:09 .05.2013 வெளியிடப்பட்டுள்ளது.

    2013-14 ஆம் கல்வி ஆண்டு பள்ளிகல்வி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை 129 -நாள் -09.05.2013 வெளியீடு

    click here to DOWNLOAD 2013-14 ஆம் கல்வி ஆண்டு பள்ளிகல்வி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை 129 -நாள் -09.05.2013

    2013-2014 ம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி

    click here to DOWNLOAD 2013-2014 ம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி

    Saturday, May 11, 2013

    பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற இ,மெயில் அனுப்பலாம்

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பிளஸ் 2 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் தேர்வு எழுதிய எந்த பாடத்திற்கும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு

     மறுகூட்டலுக்கு பதிவு செய்ய இங்கே click here 

    என்ற இணையதளத்தில் ஆன்,லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


    Friday, May 10, 2013

    TET - ஆசிரியர் தகுதித் தேர்வு 60% கட் ஆஃப் - மதிப்பெண்ணை குறைக்க வாய்பு இல்லை என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி


    பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்

    மானியக்கோரிக்கை விவாதம்

    சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர்நலம் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது..

    மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளுக்கு

    மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளும் தரமான கல்வி பெறும் வகையில், பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க சிறப்பு கல்வி உபகரணங்கள் அடங்கிய பையினை வழங்கப்படும்.இதன் மூலம் 2221 மாணவர்கள் பயன்அடைவார்கள். இதற்கான திட்டச்செலவு 18 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்.அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு சுமார் 1½ லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

    3711 ஆசிரியர்கள் நியமனம்

    மாணவ–மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில், 2011–12 மற்றும் 2012–13–ம் ஆண்டுகளில் மொத்தம் 63,125 ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்பளிப்பு செய்துள்ளார்.இதன் தொடர்ச்சியாகவும், தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி ஆகியவை சிறப்புடன் அமையவும், மாணவர்கள் தரமான கல்வியைப்பெறவும், இந்த ஆண்டு 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.

    ஆசிரியர் பணியிட விவரம் வருமாறு:–

    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 314, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 380, முதுகலை ஆசிரியர்கள் 880, பட்டதாரி ஆசிரியர்கள் 1094, இடைநிலை ஆசிரியர்கள் 887, சிறப்பு ஆசிரியர்கள் 156 ஆக மொத்தம் 3711 ஆசிரியர்கள் ஆவார்கள்.

    உதவியாளர்கள்

    ஆசிரியர் சார்ந்த காலிபணியிடங்களை நிரப்பும் வகையில், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் 16, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 2, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 99, மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்கள் 8 என மொத்தம் 125 ஆசிரியர் சார்ந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.கல்வித்துறையில், ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்புவது அவசியமாகிறது. எனவே, 850 உதவியாளர்கள் உள்பட மொத்தம் 1146 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

    ஆல்சு சாலை ‘தமிழ்ச்சாலை’ என பெயர் மாற்றம்

    சென்னையில் தமிழ்வளர்ச்சி, கலைபண்பாட்டுத்துறை, தொல்லியல் துறை ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஆல்சு சாலைக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, ‘‘தமிழ்சாலை’’ என பெயர் சூட்டப்படும்.மேலும், சென்னையில் உள்ள கொலைகாரன்பேட்டை பெயர் மாற்றம் செய்யப்படும்.

    ஆக்கி விளையாட்டு மைதானம்

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து (ஆக்கி) ஆடுகளம் ரூ.3½ கோடியில் சீரமைக்கப்படும்.மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உடற்பயிற்சிக்கூட (ஜிம்) வசதிகளை மேம்படுத்தும் வகையில், முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.இதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் குரல் ஓட்டுமூலம் மானியக்கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக உறுப்பினர்கள் கங்கவல்லி ஆர்.சுபா (தே.மு.தி.க.), பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அ.தி.முக.), திண்டுக்கல் கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மணப்பாறை ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.), சிவகங்கை சு.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), கிள்ளியூர் எஸ்.ஜான்ஜேக்கப் (காங்கிரஸ்), நாங்குனேரி ஏ.நாராயணன் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி), ஆம்பூர் ஏ.அஸ்லம் பாட்சா (மனிதநேய மக்கள் கட்சி), ஓட்டப்பிடாரம் டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), உசிலம்பட்டி பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் (ஆங்கிலோ இந்தியன்–நியமன உறுப்பினர்) ஆகியோர் பேசினார்கள்.

    2013 - 2014 கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு


    ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது

    மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது. எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம் இணைத்து ஒரு புத்தகமாகவும்; கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும் ஒரு புத்தகமாகவும் வழங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுதியாகவும்; கணிதம் ஒரு தொகுதியாகவும்; அறிவியல், சமூக அறிவியல் ஒரு தொகுதியாகவும் வழங்கப்பட உள்ளன."அதிக பாடங்கள் இருப்பதால், புத்தகங்கள், மூன்று தொகுதிகளாக வழங்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு ; ஜூன் மாதத்திற்குள் முடிக்க அறிவுரை

    ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பை, ஜூன் மாதத்திற்குள் முடிக்க கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் வரும் 15ல் ஆறாவது கணக்கெடுப்பு துவங்க உள்ளது. 26 கேள்விகள்: 


    மாநில அரசு - அரசு ஊழியர்களுக்கு வட்டி விகிதத்தில் வழங்கப்படும் கடன்களும் முன் தொகையும் குறித்த அரசாணை வெளியீடு

    CLICK HERE TO DOWNLOAD - INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government - Interest rates for the year 2013-2014 – Orders - Issued.G.O. No.148 Dt : May 4, 2013

    பி.சி....எம்.பி.சி...மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பெற்றோர் வருமான வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

    CLICK HERE TO DOWNLOAD தமிழக அரசின் செய்திக்குறிப்பு

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் TNPSC குரூப் - 1 முதன்மைத் தேர்வை எதிர் கொள்ள ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு

    Thursday, May 9, 2013

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி

    பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகத்தால், தங்களது குழந்தைகளை மெட்ரிக்., பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைகிறது. தமிழ் வழிகல்வியில் படிக்கும் குழந்தைகளை கவர, அரசு 14 வகையான பாடப் பொருட்கள் இலவசமாக வழங்கியும் கூட, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.


    ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் விண்ணப்ப படிவம்...

    தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மே 20 முதல் மே 31 வரை நடத்த அட்டவணை வெளியீடு

    தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு


    2013-2014 அட்டவணை~


    24.05.13- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்


    25.05.2013-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல்

    28.05.2013 காலை-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் / பதவி உயர்வு


    28.05.2013 மதியம்-பட்டதாரி ஆசிரியர் மாறுதல்/ பதவி உயர்வு (ஒன்றியத்திற்குள்)


    29.05.2013 காலை-தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்

    29.05.2013 மதியம் -தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு


    30.05.2013 காலை - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

    30.05.2013 மதியம் - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)


    31.05.2013 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்)


    பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-


    மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)
    மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)


    உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
    உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
    இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.

    முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
    முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)


    பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
    பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)


    சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்) சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

    விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டல் விவரம்

    விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு 10ம் தேதி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பதிவிறக்கம் செய்த செலானில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் 14ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

    பாடப்புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை

    பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே பெறப்பட்ட மாணவர்களின் பட்டியல் அடிப்படையில், தமிழ் நாடு பாடநூல் கழகத்தில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 


    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கணிணி தட்டச்சர் கட்டாயம் பெற வேண்டிய கணிணி பயிற்சி குறித்த அரசாணை வெளியிடு

    click here to download Tamil Nadu Ministerial Service - Prescription of Computer Qualifications for Typist,Steno-Typist Gr-III Amendment to Special Rules and prescription of Computer qualification for Typists/Personal Clerks for Tamil Nadu Secretariat Service - Extension of the orders to SPSUs /Statutory Boards

    Wednesday, May 8, 2013

    பிளஸ் 2 மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில், 27ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    தேர்வுத்துறை அறிவிப்பு பிளஸ் 2 தேர்வை எழுதிய பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள், அவர்கள், தேர்வெழுதிய மையங்களிலும், வரும் 27ம் தேதி, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். "தத்கால்' திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, மதிப்பெண் சான்றிதழ் அனுப்பப்படும்.


    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதல் மதிப்பெண் 1189


    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம். இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.

    இரண்டாமிடம் இருவருக்கு: இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

    மூன்றாம் இடத்தில் 9 பேர்: இந்த ஆண்டு மாநில அளவில் 9 பேர் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள்

    1) ராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை
    2) கலைவாணி குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
    3) விஷ்ணுவர்த்தன் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
    4) கண்மணி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
    5) மனோதினி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
    6) ரவீனா எஸ்,வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
    7) நிவேதிதா ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு
    8) பூஜா எஸ். சங்கர் சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி
    9) முத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்

    200க்கு 200: இந்தாண்டு ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்:

    இயற்பியல் 36
    வேதியியல் 1499
    உயிரியல் 682
    தாவரவியல் 11
    கணிதம் 2352
    கம்ப்யூட்டர் சயின்ஸ் 1469
    வணிகவியல் 1336
    பதிவியல் 1815
    பிசினஸ் கணிதம் 430