பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம், இறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை, விரைவில், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
தற்போதுள்ள மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வந்து, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இதனால், புதிய பாடத்திட்டத்தை
உருவாக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி., ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தலா, 24 தலைப்புகளில், வரைவு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள், கல்வியாளர்கள் உட்பட பல தரப்பிலும் இருந்த வந்த கருத்துகள் அடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. தற்போது, பாடத்திட்டத்தில், ஏதாவது எழுத்துப் பிழைகள், பொருள் பிழைகள் இருக்கிறதா என, சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும், இந்தப் பணி முடிந்ததும், வரைவு பாடத்திட்டத்திற்கு அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகங்கள் எழுதும் பணி துவங்கும்.வரும், 2015-16ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பாடத்திட்டங்களும், 2016-17ல், பிளஸ் 2 பாடத்திட்டங்களும், அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment