காரிமங்கலத்தை அடுத்த பொம்மஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் விவேகானந்தன் தலைமை வகித்தார். தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியை துவக்கி வைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியது:
"தமிழக முதல்வர் ஜெயலலிதா பள்ளி மற்றும் கல்லூரி கல்வியில் அதிக நாட்டம் கொண்டுள்ளார். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய பள்ளி, கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் நலனில், அதிக அக்கறை கொண்ட முதல்வர், பல பள்ளிகளை தரம் உயர்த்தி ஆணையிட்டுள்ளார். கிராமப் புறத்தில் உள்ள பல அரசு துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே எளிதாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் போல் உயர்தரமான கல்வி கற்பிக்கப்படுவதால், அரசு பள்ளிகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தங்கள், லேப்டாப், ஸ்கூல் பேக், சீருடை, காலணி, எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
இதனால், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் அரசு பள்ளிகளில் சேர்ந்து கல்வி பெற்று வருவதுடன், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாவட்ட, மாநில அளவில் மதிப்பெண்களை பெற்று வருகின்றனர்." இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment