தமிழில் தொடர்ந்து எழுதி, பேச வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்த வேண்டியுள்ளது. தமிழ், நமக்கு கண் போன்றது. பிற மொழிகள் நாம் கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. கண்ணாடியை தான் மாற்ற வேண்டுமே தவிர, கண்களை அல்ல. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால்,..
அந்த இனத்தின் மொழியை அழித்து விட்டால் போதும் என்பர். மொழி அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்தது. செம்மொழி அந்தஸ்து பெற்ற 6 மொழிகளில், தமிழ் மட்டுமே 2 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் சிறந்த இடம் வகிக்கிறது. இதை, தொடர்ந்து காப்பாற்ற, அரசு கோப்புகளிலும், அரசு அதிகாரிகளும் தமிழிலேயே எழுதுங்கள். குழந்தைகளிடமும் தமிழில் பேசுங்கள், என்றார்.துறை செயலர் ராஜாராம், இயக்குனர் சேகர், கலெக்டர் சுப்ரமணியன், மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலத் தலைவர் சாரதாம்பாள் உட்பட பலர் பேசினர். துறை உதவி இயக்குனர் பசும்பொன் வரவேற்றார். சந்திரா நன்றி கூறினார்.அமைச்சர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தமிழாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment