தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 4 லட்சம் பேரும், 2 ஆம் தாள் தேர்வை 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் எழுதினர்.
தகுதி தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விடைகளில் குழப்பங்கள் இருந்தால் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வு வாரியத்தின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் 2 கேள்விகளில் குழப்பங்கள் இருப்பதாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஒரு கேள்வியில் குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment