எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது பேச்சளவில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில்தான் இந்த துரத்திருஷ்டம். ஆனால், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவில் தனது குழந்தைகள் தாய்மொழியான தமிழை படிக்க வேண்டும் என்று அக்கறைப்படுகிறார்கள் அப்பா அம்மாக்கள்.
அதுபற்றி விவரிக்க வந்திருந்தார் அமெரிக்க தமிழ் கல்விக்கழகத்தின் தலைவர் முனைவர் அரசு செல்லையா. இவருடன் சிவானந்தம் மாரியப்பன், பொற்செழியன் ஆகியோரும் வந்திருந்தார்கள்.
தமிழில் முதலிடத்தை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கவும் முடிவு செய்திருக்கிறது இவரது தலைமையில் இயங்கும் அமெரிக்க தமிழ் கல்விக்கழகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் கவிஞர் அறிவுமதி.
நான், சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் முன்பு அமெரிக்காவுக்கு சொற்பொழிவு ஆற்ற செல்வோம். அப்போது அந்த சொற்பொழிவுகள் கோவில்களில் நடக்கும். இந்த முறை போனபோது எனக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு தமிழகர்கள் அதிகம் நிறைந்திருக்கிறார்கள்.
அரசு செல்லையாவும் சிவானந்தம் மாரியப்பனும் அங்கே பொறுப்பான பெரிய பணியில் இருக்கிறார்கள், இருந்தாலும் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக அங்கிருக்கும் ஒரு பெரிய கல்விசாலையில் வாரந்தோறும் தமிழ் கற்று தருக்கிறார்கள். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு வந்து தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்த கல்வி சேவைக்கு இவர்கள் பணம் பெறுவதில்லை என்பது முக்கியமான செய்தி.
அது மட்டுமல்ல, அந்நாட்டு அரசிடம் பேசி பள்ளிகளில் இரண்டாவது மொழியாக தமிழை கற்றுத்தர சம்மதம் வாங்கியிருக்கிறார்கள். முதலில் இரண்டு மகாணங்களில் இந்த நல்ல விஷயத்தை செய்திருக்கும் இவர்கள், அமெரிக்காவிலிருக்கும் அத்தனை மாகாணங்களிலும் இந்த பணியை விரிவு செய்யவிருக்கிறார்கள் என்று கூறினார்.
இதில் இன்னொரு ஆச்சர்யம். நமது தமிழை அங்கிருக்கும் வெள்ளைக்காரர்களும் ஆர்வமாக கற்று வருகிறார்களாம்.
No comments:
Post a Comment