பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் அடங்கிய பள்ளி மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிய வேண்டிய விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இ.எம்.ஐ.எஸ்., என்பது, தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் விபரம், ஆசிரியர்கள் விபரம், பாடபுத்தகங்கள்,
வாசிப்பு புத்தகங்கள், நீதி கருத்துக்கள், பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் இதில் முழுமையாக அடங்கியிருக்கும். விரைவில், இணையதளம் மூலம் செயல்பட உள்ளது. இந்த திட்டம், சில நடைமுறை சிக்கல்களால் முழு வடிவத்தை எட்டாத நிலையில் உள்ளது. கடந்த 2012-13ம் கல்வியாண்டு முதல் பயிலும் மாணவர்களின் விபரங்கள் பள்ளிகள் வாரியாக இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. இதுவரை, ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களின் முழுவிபரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலக "யூ-டைஸ்' ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் 97 சதவீத பள்ளிகளின் விபரங்கள் பதியும் பணி நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள மூன்று சதவீத பள்ளிகள் சார்ந்த தகவல்கள் பதியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யாத பள்ளிகளின் விபரங்களை வரும் 23ம் தேதிக்குள் பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறுகையில், ""இ.எம்.ஐ.எஸ்., செயல்பாடுகள் குறித்த அதிகாரிகள் கூட்டம், வரும் 19ம் தேதி சென்னையில் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் இப்பணிகள் 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ""மீதம் உள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இதுவரை பதியப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் நேற்று சரிபார்க்கப்பட்டது,'' என்றார்.மேலும், சேலம், சிவகங்கை, தர்மபுரி, தேனி, திருவள்ளுர், பெரம்பலூர், வேலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் - ஆசிரியர்களின் பதிவு விபரங்களை முடிக்கவில்லை என்று சுற்றறிக்கையில், குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment