காலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர், 10ல் தமிழ் முதல்தாளுடன் தேர்வு துவங்குகிறது. செப்டம்பர், 11ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், செப்டம்பர், 12ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 14ம் தேதி கணிதம், விலங்கியல், செப்டம்பர், 17ம் தேதி வணிகவியல், புவியியல், ஹோம்சயின்ஸ், செப்டம்பர், 18 தேதி, இயற்பியல், பொருளியல், செப்., 19ம் தேதி, கம்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, புள்ளியியல், செப்டம்பர், 20ம் தேதி, வேதியியல், அக்கவுண்டன்ஸி, செப்டம்பர், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல், பிஸினெஸ் மாத்ஸ் தேர்வு, காலை, 10 மணி முதல் மதியம், 1.15 மணி வரை நடத்தப்படுகிறது.
அடுத்ததாக பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செப்டம்பர்,12ம் தேதி, தமிழ் முதல்தாள், செப்டம்பர், 13ம் தேதி தமிழ் இரண்டாம்தாள், செப்டம்பர், 14 ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர், 17ம் தேதி ஆங்கிலம் இரண்டாம்தாள், செப்டம்பர், 18 கணிதம், செப்டம்பர், 19ம் தேதி அறிவியல், செப்டம்பர், 20ம் தேதி, சமூக அறிவியல் தேர்வு, காலை, 10 மணி முதல், மதியம், 12.45 மணி வரை நடக்கிறது.
No comments:
Post a Comment