CLICK HERE GET YOUR ADMIT CARD
என்ற, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. இதில் இடம் பெற்று, ஏற்கனவே, உரிய சான்றிதழ்களை, இணையதளத்தில், "அப்-லோட்' செய்ய வேண்டும் அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.குரூப்-1 மெயின் தேர்வு, செப்., 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும். இத்தேர்வை, 1,391 பேர் எழுத அனுமதிக்கப்படுவர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.அவர், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: துணை கலெக்டர் பதவியில், எட்டு பணியிடம்; டி.எஸ்.பி., பதவியில், நான்கு பணியிடம்; வணிக வரித் துறையில், உதவி கமிஷனர் பதவியில், ஏழு பணியிடம்; மாவட்ட பதிவாளர் பதவியில், ஒரு பணியிடம்; மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பதவியில், ஐந்து பணியிடம் என, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த பிப்ரவரி, 16ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது.
இத்தேர்வை, 75,627 பேர் எழுதினர். இதன் முடிவு, கடந்த மே, 16ல் வெளியிடப்பட்டது. இதில், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு, 50 பேர் வீதம், 1,391 பேர், மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே, "கட்-ஆப்' மதிப்பெண்களை, அதிக தேர்வர்கள் எடுத்திருப்பதால், ஒரு பதவிக்கு போட்டியிடும் தேர்வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெயின் தேர்வு, வரும் செப்டம்பர், 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் நடக்கும். தேர்வு மையங்கள் குறித்த விவரம், "ஹால் டிக்கெட்'டுகள் வெளியிடுவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். மெயின் தேர்வு, "ஜெனரல் ஸ்டடிஸ் - 1, 2, 3' என, மூன்று தாள்களாக நடக்கும்.
No comments:
Post a Comment