அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள்.
விடைத்தாள்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு கம்ப்யூட்டரில் ஸ்கேனிங் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment