தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலைபள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழக அரசு, கடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில், 50 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தது.
நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இது குறித்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இனிமேல், உயர்நிலை பள்ளியாக மாற்றி அறிவித்தாலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நியமித்தல், அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் மீண்டும் அழைத்து வருதல் என்பது நடக்காத காரியங்கள். அரசின் அறிவிப்பு, வெறும் கண்துடைப்பானதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக உயர்த்தப்படும் என, அரசு அறிவித்தது மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment