கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, August 2, 2013
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2013-2014 பி.எட்./எம்.எட் சேர்க்கை அறிவிப்பு
Admission to B.Ed/M.Ed for the Year 2013-14 - Issuance of Instructions
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில்,ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.ஒற்றை சாரள முறை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், ஒற்றை சாரள முறையில், பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள்,விருப்பப்பட்டு ஒப்படைக்கப்படும் இடங்களும், கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லூரி கல்வி இயக்ககம், நேற்று அறிவித்தது. படிப்பிற்கான விண்ணப்ப படிவம், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும்,காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னையில், திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப கட்டணம், 300 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 175 ரூபாய். விண்ணப்ப கட்டணத்தை, பணமாகவோ, "டிடி'யாகவோ செலுத்துவோர், "செயலர், தமிழ்நாடு பி.எட்., அட்மிஷன், சென்னை - 5' என்ற பெயரில்,விண்ணப்பத்தை பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்,விண்ணப்பங்களை, ஜாதி சான்றிதழ் நகலை செலுத்தி, பெற்று கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment