தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் மாதம் குறிப்பிட்ட நாளில் மனித வளமேம்பாட்டு துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.500 வீதம், கல்வி ஆண்டு முடிவில் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வங்கி கணக்குகள் மூலம் விடுவிக்கப்பட இருக்கிறது. இத்தொகை 9-ம் வகுப்பு முதல், தொடர்ந்து 12-வது வகுப்பு வரையில் வழங்கப்படும்.
இத்தேர்வில் பங்கேற்பதற்கு மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். கடந்த ஆணடு அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 7-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீத மதி்ப்பெண்கள் பெற்று முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றும், அதோடு நிகழாண்டில் 8-வது படித்து வருகிறராகவும் இருக்க வேண்டும். மேலும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.எனவே தகுதியானவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து மாணவ, மாணவிகள் ஆக.2ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். அதையடுத்து, பள்ளிகளில் சேகரித்த விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலக அலுவலர்களிடம் ஒப்படைக்கவும் வேண்டும்இத்தேர்வில், பங்கே வேண்டும். கல்வித் உதவி தொகை 7-வது தேர்ச்சி பெற்று 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment