Click here to download பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற பகுதிநேர படிப்புக்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடமும், தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டம் பயில மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அனுமதி பெற வேண்டுமென 1989, ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 944ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக சேர்ந்து முழுநேர உயர்கல்வி பயில்வதை அனுமதிப்பது தொடர்பாக அரசாணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.இந்நிலையில் நேரடி சேர்க்கை மூலம் பிஎட் போன்ற உயர் கல்வி பயில்வதற்கு முன் அனுமதி வேண்டி பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளன.
இதையடுத்து நேரடி சேர்க்கை மூலம் முழுநேர உயர்க்கல்வியை அனுமதிப்பது தொடர்பாக உரிய அரசாணை வேண்டி, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார்.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்டுள்ள அரசாணை:அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் நேரடி சேர்க்கை மூலம் பிஎட் பயின்ற காலங்களை மருத்துவ விடுப்பை தவிர, ஈட்டிய விடுப்பு, சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு வழங்கியும், மீதமுள்ள நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கியும் முறைப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதி அரசாணை வெளியிடுவதற்கு முதல் நாளான 2013 ஜூலை 22 வரை நேரடிச் சேர்க்கை மூலம் பிஎட் பயின்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தற்போது தொலைதூரக்கல்வி மூலம் பிஎட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து, நேரடி சேர்க்கை மூலம் உயர்கல்வி பயில பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதிப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் நேரடி சேர்க்கை மூலம் பிஎட், இளநிலை, முதுநிலை பட்டம் பயில்வதை அனுமதிப்பது தொடர்பான அரசாணையும் இல்லை. எனவே இனிவரும் காலங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடிச் சேர்க்கை மூலம் பிஎட், இளநிலை, முதுநிலை பட்டம் பயில அனுமதிப்பதை தவிர்க்க பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தப்படுகிறார்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment