மாணவர்களுக்கு வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவி தொகை விபரம் குறித்த கையேடை, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்வி துறை, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஒன்று முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், கணினி, புத்தகங்கள், பஸ் பாஸ், சீருடை, கல்வி உதவிகொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.இதில், தவறுகள் ஏற்படுவதை தடுக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன், மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த கையேடு தயாரித்து வைக்க வேண்டும். இதை, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, சுற்றறிக்கையல் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment