காலாண்டு தேர்வு, பிளஸ் 2வுக்கு, செப்டம்பர், 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, செப்., 12ம் தேதியும் துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அனைத்தும் ஒரே சமயத்தில் நடத்தப்படுகிறது.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, August 31, 2013
அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி
மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 4 லட்சம் பேரும், 2 ஆம் தாள் தேர்வை 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் எழுதினர்.
Friday, August 30, 2013
Thursday, August 29, 2013
Wednesday, August 28, 2013
பொது தேர்வு நடைமுறையில் மாற்றம் கிடையாது': செயலர் சபிதா திட்டவட்டம்
தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, திட்டவட்டமாக தெரிவித்தார்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், முதல் வாரத்தில் துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும்.
பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்
கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில்
(அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில்
வேலையில் சேர்ந்தார்.இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார்.
(அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில்
வேலையில் சேர்ந்தார்.இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது. எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார்.
மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசின் கல்வித் துறை, 2007ம் ஆண்டு, அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
"உரிமைக்கு எதிரானது':
இதனால், பாதிப்புக்கு உள்ளான வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள், இந்த ஆணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "ரிட்' மனு தாக்கல் செய்தனர்.
"உரிமைக்கு எதிரானது':
இதனால், பாதிப்புக்கு உள்ளான வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள், இந்த ஆணையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், "ரிட்' மனு தாக்கல் செய்தனர்.
Tuesday, August 27, 2013
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும். தாள் 1ல் இரண்டு கேள்விகள் தவறாக கேகப்பட்டதால் 2 மார்க் போனஸாகவும்,
தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேகப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது
தாள் 2ல் ஒருகேள்வி தவறாக கேகப்பட்டதால் 1 மார்க் போனஸாகவும் TRB வழங்க உள்ளது
கடந்த ஆண்டு நடந்த,TNTET JUNE 2012 OCTOBER - 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Teachers Eligibility Test - 2012 - Certificate Verification for Certificate not produced and Absent Candidates
கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
இக்னோ - IGNOU B.Ed examination Schedule December 2013
Es 331-9.12.13
332_ 10/12
333 _11/12
341 _12/12
342 _13/12
343 _14/12
344 _16/12
345 _18/12
334- 19/12
046_ 20/12
335 _21/12
065 _23/12
361 _24/12
066_26/12
362_27/12
363 _28/12
364_30/12
click here download to time table
ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவரித் துறை செயலர்கள் உட்பட, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்
இதுகுறித்து, தமிழகத் தலைமைச் செயலர், ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பு..
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்
இதுகுறித்து, தமிழகத் தலைமைச் செயலர், ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பு..
ஆறாம் வகுப்பிலேயே "லேப்' அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்
ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்,'' என, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார். கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
TNPSC - குரூப் 4 தேர்வுக்கான விடைகள் வெளீயீடு
குரூப்- 4 தேர்வு விடைகளை அறிந்து கொள்ள CLICK HERE AND GET ANSWER KEY
1.GENERAL TAMIL
2.GENERAL ENGLISH
3.GENERAL STUDIES
இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம்:அரசு புது உத்தரவு!
தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளின் அதிகாரப்பூர்வான விடைத்தாள் வெளீயீடு - TRB
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான
அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் தபால் மூலமாகவோ / வாரியத்தில்
வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள்
வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
TENTATIVE KEY
|
|
Dated:
27-08-2013
|
Chairman
|
Monday, August 26, 2013
மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் ஆசிரியர்களின் கல்விச் சான்று பறிக்கப்படும் என்றும், அவர்களால் காலம் முழுவதும் ஆசிரியர் பணி செய்ய இயலாத நிலைமைக்குத் தள்ளப்படுவர் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்
காரிமங்கலத்தை அடுத்த பொம்மஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
Saturday, August 24, 2013
தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.
தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் தயாரிப்பு: தாயின் பெயரும் பதிவு
பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், புதிதாக தேர்வு எழுதும் மாணவரின் தாய் பெயரும் சேர்த்து, பதிவு செய்யப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, இன்று, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 14 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வு என்பதால், டி.என்.பி.எஸ்.சி., விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இளநிலை உதவியாளர், 3,531 பேர்; வரி தண்டலர், 19; தட்டச்சர், 1,738; சுருக்கெழுத்து தட்டச்சர், 242; நில அளவர், 6; வரைவாளர், 30 என, 5,566 காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், இன்று காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கிறது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு: வெளியிட தேர்வு வாரியம் ஏற்பாடு
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்கள் சேகரிக்க முடிவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர். இந்த பிரச்னையை,
காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்கள் : இரண்டு மாதங்களில் அதிகபட்சம் முடிக்க சென்னை ஐகோர்ட் - உத்தரவு
தமிழகத்தில், பள்ளிகளில் உள்ள, கணினி ஆசிரியர் பணியிடங்களில், இரண்டு மாதங்களில், 652 பேரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை துவங்கி, கணிசமான பகுதியை முடிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் : தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பெயர் திருத்தம், இன்ஷியல் திருத்தம்
ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனர்
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.
சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.
எஸ்.எஸ்.ஏ பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கேள்விக்குறி
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம் இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம் வழங்கப்படும்.
Thursday, August 22, 2013
கடித எண். 8764 நாள்: 18.4.2012 ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.
நன்றி - Thomas Rockland
கடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.இந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், " பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும், தினசரி வருகை பதிவுகளை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.நாளிதழ் செய்தி
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாக செயல்பாடு அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவு, விபரம் கேட்பு, சேமிக்கும் தகவல், விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்போது, ஆன்லைன் மூலமாகவே பரிமாறப்படுகிறது.
REGULAR - பி.எட்., படிப்புக்கான "கட்-ஆப்' 26ம் தேதி வெளியீடு : 30ல் துவங்குகிறது கலந்தாய்வு
பி.எட்., படிப்புக்கான, "கட்-ஆப்' மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய வாய்ப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள, ஆக., 26 முதல், செப்., 7 வரை, வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல், நடக்க உள்ளது. இதன்படி, மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல், பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும்.
பள்ளி பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை
பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்,'' என, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார். பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை, அமலில் உள்ளது. இதற்காக, பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
Wednesday, August 21, 2013
தற்போது 1.1.2011 -க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர்களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.
தற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர்S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின் படி பார்ப்போம்.
இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010முதல் பெற்றனர்.
SPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :
இது ஒரு நபர் குழுவைத் தொடர்ந்து அரசாணை 270 நாள்.26.8.2010 இன் மூலம் இ.நி.ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது அரசாணையில் "Government direct that the Special Allowance of Rs.500/- per month be granted to the Secondary Grade Teachers and Headmaster High Schools" என்று உள்ளது. மேலும் இறுதியில் " The Special Allowance sanctioned in Para - I above shall take effect from 1.8.2010.இதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010முதல் பெற்றனர்.
இரட்டைப் பட்டம் வழக்கு நாளை ( 21.8.13 ) விசாரணைக்கு வரும் என நம்பிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் விடுமுறையில் இருப்பதால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் வழக்கு நாளை முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வருவதற்கு தீவிரமாக முயற்சி செய்த திரு.கலியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கு ஏறத்தாழ நாளை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி - திரு.முத்துப்பாண்டியன் ( தவவல் )
நன்றி - திரு.முத்துப்பாண்டியன் ( தவவல் )
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம் 1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர்.
Tuesday, August 20, 2013
இரண்டாவது கட்டமாக குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' பெறாதவர்களுக்கு, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியீடு
click here & get your HALL TICKET
தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள், தேர்வாணைய, "இ-மெயிலுக்கு' அனுப்பும்படி, தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு,
3,120 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை: ஓராண்டில் 500 பணியிடங்களே நிரம்பியது
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள, உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவித்து ஓராண்டாகியும், இதுவரை, 25 சதவீதப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன.தமிழகத்தில், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். 2007ல் இருந்து, இக்கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
ஆன்-லைனில் பதிவு செய்யாத 9 மாவட்ட பள்ளிகளுக்கு கெடு
ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்யாத, ஒன்பது மாவட்ட பள்ளிகளுக்கு, கல்வித் துறை, "கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், 36,505 அரசு பள்ளிகள், 8,266 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. புள்ளி விவர கணக்கீட்டிற்காக, இப்பள்ளிகளின் விவரங்களை, ஆன்-லைன் மூலம், கல்வி தகவல் மேலாண்மை தொகுப்பில் பதிவு செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
51 தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு
தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்கக்கல்வித் துறையில் காலியாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நேற்று சென்னையில் நடந்தது..
நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–மத்திய அரசு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 2009–ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பென்ஷன் என்பது, ஒருவர், நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி; அது, அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள், வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து, அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது - உச்ச நீதிமன்றம்
அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TRB - TNTET - 2013 Tentative Key answers - உத்தேச விடைகள்
TRB-TNTET-2013 Tentative Key Answers
Paper - I (17.08.2013)
click here - A- Series
click here - B- Series
click here - C- Series
click here - D- Series
ஆசிரியர் தகுதி தேர்வு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம் 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது.
Monday, August 19, 2013
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு? டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் - நாளிதழ் செய்தி
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் "கற்க கசடற'என்ற புதிய மாத இதழ் வெளியிட- பள்ளிக்கல்வித்துறை திட்டம்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் "கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்படாது
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது, தற்போதுள்ள, 60 வயதிலிருந்து, 62 ஆக உயர்த்தப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்பட்ட தகவல்களுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது
தமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு வரை இந்த முறை அமலில் உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது. அதற்கான பாடப்புத்தகங்கள் இப்போதே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வு: மூன்று வாரங்களில் விடைகள் வெளியீடு
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை 4 லட்சத்து 77 பேர் எழுதினர்.இந்தத் தேர்வுக்கு 4 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பித்தனர். இரண்டு தாள்களையும் சேர்த்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இந்த ஆண்டு (2013) மொத்தம் ஆறு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
Sunday, August 18, 2013
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவமும், பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆசிரியர் தகுதி மதிப்பெண்ணில் சலுகை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் "நோட்டீஸ்' Click Here
ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்களில், சலுகை வழங்கக் கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகளில் பணியாற்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர் சம்மேளனத்தின் நிறுவனர் கருப்பையா என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற, ஒருவர், 60
ஆசிரியர் பல்கலை கழகத்திற்கு தேர்வு கட்டுப்பாடு அதிகாரி நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின், தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக, பேராசிரியர், மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 600க்கும் மேற்பட்ட, தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் கவிதை, பேச்சு போட்டிகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் பேச்சாற்றலையும் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு, கவிதை, கட்டுரைப்போட்டிகளை நடத்த தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஆக.21ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆக.23ல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் அந்தந்த மாவட்ட அளவில் போட்டி நடைபெறும்.
Saturday, August 17, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் - 2013 உத்தேச பதில்கள் வெளீயீடு
Sl.No | Subject | Question (or) Answer Keys |
1 |
Child Development and Pedagogy
| Soon update |
2 |
Language I
|
|
3 | Language II - English |
|
4 | Mathematics |
|
5 | Environmental Studies |
|
அரசு ஊழியர்கள், அனைத்து கோப்புகளிலும் தமிழில் எழுதுங்கள்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் வலியுறுத்தினார்.
தமிழில் தொடர்ந்து எழுதி, பேச வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்த வேண்டியுள்ளது. தமிழ், நமக்கு கண் போன்றது. பிற மொழிகள் நாம் கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. கண்ணாடியை தான் மாற்ற வேண்டுமே தவிர, கண்களை அல்ல. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால்,..
Friday, August 16, 2013
பாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய CLICK HERE
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), பி.எஸ்சி.,(கணிதம்), பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட படிப்புக்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
UG Programmes - April 2013
PG Programmes - April 2013
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), பி.எஸ்சி.,(கணிதம்), பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட படிப்புக்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
எம்.எட்., விண்ணப்பம் ஆகஸ்ட் 23ம் தேதி வினியோகம் நீட்டிப்பு
அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கடந்த 6ம் தேதி முதல் நேற்றுவரை வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவியர் பயன்பெறும் வகையில், வரும் 19 முதல் வரும் 23ம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை 23ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மை தகவல் மையவிபரங்கள் ஆகஸ்ட் 23க்குள் பதிய உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து செயல்பாடுகளும் அடங்கிய பள்ளி மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிய வேண்டிய விபரங்களை, வரும் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இ.எம்.ஐ.எஸ்., என்பது, தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் விபரம், ஆசிரியர்கள் விபரம், பாடபுத்தகங்கள்,
சத்துணவு தயாரிக்க "சோலார் குக்கர்' "சூரிய சோறு!' : மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்
கோவை மாநகராட்சி சார்பில், வடகோவை மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் "சோலார் குக்கர்' முறை பரீட்சார்த்த முறையில் கையாளப்படுகிறது. இத்திட்டம் வெற்றியடைந்தால், மாநகராட்சி பள்ளிகளில் "சோலார் குக்கர்' திட்டம் விரிவடையும்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 மேல்நிலைப்பள்ளிகளில் 10 லட்சம் ரூபாயில்,...
அடுத்த வாரம் குரூப்-2 தேதி அறிவிப்பு
அடுத்த வாரம், குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். நகராட்சி கமிஷனர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளில், 1,059 பணியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களில், 757 பணியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
குரூப்-1 மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு: செப்., 27 முதல் 29 வரை நடக்கிறது
செப்டம்பரில் நடக்க உள்ள மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள
தேர்வர்களின் பதிவு எண்கள்,
CLICK HERE GET YOUR ADMIT CARD
என்ற, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. இதில் இடம் பெற்று, ஏற்கனவே, உரிய சான்றிதழ்களை, இணையதளத்தில், "அப்-லோட்' செய்ய வேண்டும் அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை
மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
மதிய உணவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் பலியானது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை, மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
Wednesday, August 14, 2013
டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.ஆக.,17ல், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள் 1 தேர்வு, 27 மையங்களிலும், ஆக.,18 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வுகளும் நடக்கின்றன. இத்தேர்வை, 6 லட்சத்து 85 ஆயிரத்து 416 பேர் எழுதுகின்றனர்.
Tuesday, August 13, 2013
இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.
வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை முன்னிட்டு 17-8-2013 சனிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் 17-8-2013 சனிக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றமும், முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர்கள் 4பேருக்கு பதவி உயர்வுஅளிக்கப்பட்டு இருக்கிறது.இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைசெயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள
உத்தரவில் கூறி இருப்பதாவது:–(அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக்குறிப்புக்குள்கொடுக்கப்பட்டு உள்ளது) இடமாற்றம்
1. ஏ.கருப்பசாமி –
இணை இயக்குநர்–பணியாளர்
தொகுதி (இணை இயக்குநர்–
பணியாளர்,
தொடக்கக்கல்வி இயக்ககம்)
செய்யப்பட்டுள்ளனர்.முதன்மை கல்வி அலுவலர்கள் 4பேருக்கு பதவி உயர்வுஅளிக்கப்பட்டு இருக்கிறது.இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைசெயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள
உத்தரவில் கூறி இருப்பதாவது:–(அதிகாரிகளின் பழைய பதவி அடைப்புக்குறிப்புக்குள்கொடுக்கப்பட்டு உள்ளது) இடமாற்றம்
1. ஏ.கருப்பசாமி –
இணை இயக்குநர்–பணியாளர்
தொகுதி (இணை இயக்குநர்–
பணியாளர்,
தொடக்கக்கல்வி இயக்ககம்)
Sunday, August 11, 2013
அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கப்படுகிறது. இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு - 2013 திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் வெளீயீடு
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
|
|
Dated: 06-08-2013
|
C
|
அறிவிப்புடன் நிறுத்தப்பட்டஅரசு பள்ளிகள் தரம் உயர்வு - நாளிதழ் செய்தி
தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலைபள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழக அரசு, கடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில், 50 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தது.
அமெரிக்க பள்ளிகளில் தமிழ் இரண்டாவது மொழியானது!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது பேச்சளவில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில்தான் இந்த துரத்திருஷ்டம். ஆனால், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவில் தனது குழந்தைகள் தாய்மொழியான தமிழை படிக்க வேண்டும் என்று அக்கறைப்படுகிறார்கள் அப்பா அம்மாக்கள்.
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை - நாளிதழ் செய்தி
அரசு பள்ளிகளில் கடந்த 1990,91, 1991,92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும். 2 அலுவலகங்களை பார்வையிட வேண்டும்.
Thursday, August 8, 2013
மாணவர் வழங்கப்படும் நலத்திட்டம் கையேடு தயாரிக்க உத்தரவு
மாணவர்களுக்கு வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவி தொகை விபரம் குறித்த கையேடை, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்வி துறை, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தி உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஒன்று முதல் பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், கணினி, புத்தகங்கள், பஸ் பாஸ், சீருடை, கல்வி உதவிகொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.இதில், தவறுகள் ஏற்படுவதை தடுக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன், மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த கையேடு தயாரித்து வைக்க வேண்டும். இதை, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, சுற்றறிக்கையல் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, சுற்றறிக்கையல் கூறப்பட்டுள்ளது.
TNPSC - குரூப் - IV தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளீயீடு
Posts included in GROUP-IV
Services, 2013 - 2014
(Date of
Written Examination:25.08.2013)
RECEIPT OF APPLICATION
(ACKNOWLEDGEMENT)
CLICK HERE AND GET YOUR HALL TICKET
எம்.பில்., பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு இயக்குனர் அனுமதி பெற்று படிக்கலாம்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.
Wednesday, August 7, 2013
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர்.
நேரடி சேர்க்கை மூலம் உயர்கல்வி கற்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தடை
Click here to download பள்ளிகல்வி இயக்குநர் செயல்முறைகள் ந .க .எண் 6462/டி2/இ1/2008நாள் 31.07.2013
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற பகுதிநேர படிப்புக்கு பள்ளிக் கல்வி இயக்குனரிடமும், தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டம் பயில மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அனுமதி பெற வேண்டுமென 1989, ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 944ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேரடியாக சேர்ந்து முழுநேர உயர்கல்வி பயில்வதை அனுமதிப்பது தொடர்பாக அரசாணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.Tuesday, August 6, 2013
பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த பள்ளி கல்வித் துறை அமைச்சர்
பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்.
கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
REGULAR - பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பம் : 9ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு
பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை, 13 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பி.எட்., சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் 16ம் தேதி, மாலை, 3:00 மணி வரை, வினியோகிக்கப்படும். வரும், 15ம் தேதி, விண்ணப்ப வினியோகம் இருக்காது. மற்றபடி, சனி, ஞாயிறு உட்பட, அனைத்து நாட்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட, ஏழு அரசு கல்லூரிகள், ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்
1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை, சென்னை.
2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி, சென்னை.
3. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.
4. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.
5. அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை.
6. அரசு கல்வியியல் கல்லூரி, கோவை.
இரண்டு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட, ஏழு அரசு கல்லூரிகள், ஆறு அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 16ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், "செயலர், தமிழ்நாடு பி.எட்., சேர்க்கை - 2013, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்
1. கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை, சென்னை.
2. வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், திருவல்லிக்கேணி, சென்னை.
3. அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்.
4. அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு.
5. அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை.
6. அரசு கல்வியியல் கல்லூரி, கோவை.
ஆசிரியர் தகுதித் தேர்வு - 2013 நுழைவுச் சீட்டு வெளீயீடு
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இன்று ( 6.8.2013 ) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் 4வது வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 22ந்தேதி வியாழக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதபதிகள் விசாரணையை வருகிற 22.8.2013 ஒத்திவைத்தனர். இன்று இன்று நடைபெற்ற விசாரணை 5 நிமிடங்கள் மட்டுமே நடந்ததது என்றும், இந்த வழக்கு வருகிற 22.8.2013 அன்று விரிவாக நடக்கவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Monday, August 5, 2013
இரட்டைப்பட்டம் வழக்கு நாளை (06.08.2013 - செவ்வாய்) விசாரணைக்கு வருகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தில் இழுத்துக்கொண்டே சென்ற இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி மற்றும் திரு.ஆரோக்கியராஜ் இருவரும் நம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். இந்தச்செய்தி பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமையும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு - தமிழக அரசு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், 5,065 அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள்; 1,549 நடுநிலைப் பள்ளிகள்; 640 உயர்நிலைப் பள்ளிகள்; 1,141 மேல்நிலைப் பள்ளிகள் என, 8,395 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அகவிலை படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடுத்த மாதம், 10 சதவீத அகவிலை படி உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, 80 சதவீதமாக இருக்கும் அகவிலை படி, 90 சதவீதமாக உயரும். இதனால், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவர்.
தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு
இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
Friday, August 2, 2013
உதவி பேராசிரியர் நியமனம் : ஒரு வழியாக பணி அனுபவ கணக்கீட்டை அறிவித்தது டி.ஆர்.பி.,
கீழ்கண்ட தேதிகளில்,
குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன், கல்லூரி ஆசிரியராகப்
பணியாற்றுபவர்களின், பணி அனுபவம் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். முதுகலை
பட்ட படிப்பில், 50 சதவீத மதிப்பெண்களுடன், 1991ம் ஆண்டு முன் தேர்ச்சி
பெற்றவர்கள்; 1991, செப்., 19ம் தேதிக்கு முன், "நெட், ஸ்லெட்'டுடன்,
முதுகலையில், 55 மதிப்பெண் பெற்றவர்கள்; 1993, டிச., 31ம் தேதிக்கு முன்
எம்.பில்., முடித்தவர்கள், பிஎச்.டி., சமர்ப்பித்தவர்கள்; 2002, டிச., 31ம்
தேதிக்கு முன், பி.எல்., முடித்துவிட்டு, இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு
எடுத்தவர்கள் - பிஎச்.டி., முடித்து விட்டு, முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு
எடுத்தவர்கள்; 2010, ஜூலை 30ம் தேதிக்கு முன், பிஎச்.டி., முடித்தவர்கள்
ஆகியோரது, பணி அனுபவம், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.பணி அனுபவ கணக்கீட்டால், உதவி பேராசிரியர் நியமனத்தில், இரு மாதங்களாக நிலவி வந்த சர்ச்சை, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பால்..
பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம், இறுதி செய்யப்பட்டு விரைவில், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் - கல்வித் துறை
பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம், இறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை, விரைவில், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
தற்போதுள்ள மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வந்து, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இதனால், புதிய பாடத்திட்டத்தை
தற்போதுள்ள மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வந்து, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இதனால், புதிய பாடத்திட்டத்தை
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.
பி.எட். தேர்வு முடிவு வெளியீடு
click here to download B.ED Exam Result May/June 2013
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படித்த மாணவ, மாணவிகள் கடந்த மே மாதம் தேர்வு எழுதினார்கள்.
இந்த தேர்வை 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.இந்த நிலையில் தேர்வு முடிவு
இந்த தேர்வை 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு எப்போது வரும் என்று மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.இந்த நிலையில் தேர்வு முடிவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 2013-2014 பி.எட்./எம்.எட் சேர்க்கை அறிவிப்பு
Admission to B.Ed/M.Ed for the Year 2013-14 - Issuance of Instructions
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்
பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில்,ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
Thursday, August 1, 2013
பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் என்ற தமிழக அரசு வழங்கிய தெளிவுரை ஆணைக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால் தடை விதித்து உத்தரவு.
தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது.
டி.இ.டி.,( TET ) தேர்வு எழுதுவோருக்கு வரும் 5ம் தேதி, "ஹால் டிக்கெட்'
டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
இன்று வந்த இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 6ந்தேதி ஒத்தி வைப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு எதிர் தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 - செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வழக்கை முன்னின்று நடத்தி வரும் சிவகங்கை ஆரோக்கியராஜ், திருவண்ணாமலை விஸ்வநாதன், விழுப்புரம் கலியமூர்த்தி, திருவள்ளூர் கருணாலயபாண்டியன் ஆகியோர் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். 06.8.2013க்கு பின்னர் தள்ளி போவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.
பி.எட். படிப்பில் புதிய பாடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் "தினமணிக்கு' அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர்.
பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு
மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்பதறகு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தமிழக முழுவதும் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 8-வது படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் ஆண்டுதோறும்..
அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது
ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள்
விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013மாதத்திலிருந்து ஜூலை 2013
வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது.எனவே AICPIN குறியீட்டு எண்படி ஜூலை மாதத்திற்கானஅகவிலைப்படி உயர்வு 10 % என்பது ஏறத்தாழஉறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2013 முதல் உயர்த்தக்கூடும்.மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும்உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால்
அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013மாதத்திலிருந்து ஜூலை 2013
வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது.எனவே AICPIN குறியீட்டு எண்படி ஜூலை மாதத்திற்கானஅகவிலைப்படி உயர்வு 10 % என்பது ஏறத்தாழஉறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2013 முதல் உயர்த்தக்கூடும்.மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும்உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால்
அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)